Categories
மதுரை மாவட்ட செய்திகள்

காதல் விவகாரமா….? இன்ஜினியரிங் மாணவர் எடுத்த விபரீத முடிவு…. போலீஸ் விசாரணை…!!

விடுதியில் மாணவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தை சேர்ந்த ஹமத் நவாஸ் லோன்(19) என்பவர் மதுரையில் இருக்கும் தனியார் பொறியியல் கல்லூரியில் முதலாமாண்டு படித்து வந்துள்ளார். இவர் கல்லூரி விடுதியில் தங்கியுள்ளார். நேற்று முன்தினம் நவாஸ் தங்கியிருந்த அறையின் கதவு நீண்ட நேரமாக திறக்கப்படவில்லை. இதனால் சக மாணவர்கள் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது நவாஸ் தூக்கில் சடலமாக தொங்குவதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து உடனடியாக காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது, அதன்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் நவாஸின் உடலை மீட்டு திருமங்கலம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர்.

இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் நடத்திய விசாரணையில் தற்கொலை செய்து கொள்வதற்கு முன் நீண்ட நேரமாக நவாஸ் செல்போனில் பேசியது தெரியவந்தது. மேலும் காஷ்மீரை சேர்ந்த ஒரு பெண்ணை அவர் காதலித்து வந்துள்ளார். எனவே காதல் விவகாரத்தில் மாணவர் தற்கொலை செய்து கொண்டாரா அல்லது வேறு ஏதேனும் காரணம் உள்ளதா உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |