Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

“காதல் விவகாரம்”…. அரசு பள்ளியில் மோதி கொண்ட மாணவர்கள்…. போலீஸ் விசாரணை…!!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள நாகர்கோவில் வடசேரி பகுதியில் அரசு மேல்நிலைப்பள்ளி அமைந்துள்ளது. இந்த பள்ளியில் வடசேரியில் வசிக்கும் மாணவன் 11- ஆம் வகுப்பு படித்து வருகிறார். நேற்று மதியம் அந்த மாணவருக்கும், அதே வகுப்பில் படிக்கும் மற்றொரு மாணவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இருவரும் ஒருவரை ஒருவர் சரமாரியாக தாக்கி கொண்டனர். அப்போது வடசேரியை சேர்ந்த மாணவன் கையில் இருந்த ஸ்டீல் தண்ணீர் பாட்டிலால் மற்றொரு மாணவனின் தலையில் தாக்கியதால் காயம் ஏற்பட்டு ரத்தம் வடிந்தது.

இதனை பார்த்த ஆசிரியர்கள் காயமடைந்த மாணவனை மீட்டு ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். இதுகுறித்து அறிந்த போலீசார் பள்ளிக்கு சென்று விசாரணை நடத்திய போது ஒரே பெண்ணை காதலிப்பது தொடர்பாக இரண்டு மாணவர்களுக்கும் இடையே போட்டி இருந்துள்ளது. அதன் காரணமாக இருவரும் மோதிக்கொண்டது தெரியவந்தது. இதுகுறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Categories

Tech |