Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

“காதல் விவகாரம்” மாணவரை கொலை செய்து கிணற்றில் வீசிய கொடூரம்…. 2 சிறுவர்கள் கைது…. தூத்துக்குடியில் பரபரப்பு…!!!

மாணவர் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மதுரை மாவட்டத்திலுள்ள எம்எம்சி காலனியில் முருகன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு வெற்றிச்செல்வன் (17) என்ற மகன் இருந்துள்ளார். இவர் ஒரு தனியார் கல்லூரியில் பிகாம் முதலாம் ஆண்டு படித்து வந்த போது திடீரென கல்லூரியில் ஏற்பட்ட தகராறு காரணமாக வெற்றி செல்வன் கல்லூரியில் இருந்து இடை நீக்கம் செய்யப்பட்டார். அதன் பிறகு வெற்றி செல்வன் ஒரு தனியார் பெட்ரோல் பங்கில் ஊழியராக வேலைப்பார்த்து வந்துள்ளார். கடந்த மாதம் 30-ம் தேதி வீட்டை விட்டு வெளியேறிய வெற்றி செல்வன் நீண்ட நேரம் ஆகியும் வீடு திரும்பாததால், அவருடைய தாயார் ராணி அவனியாபுரம் காவல்நிலையத்தில் புகார் கொடுத்தார். அந்த புகாரின் படி வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் வெற்றி செல்வனின் நண்பர்களிடம் தீவிர விசாரணை நடத்தினர்.

அப்போது வெற்றி செல்வனின் நண்பரான அவனியாபுரம் பகுதியை சேர்ந்த ஒரு 17 வயது சிறுவனிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அந்த விசாரணையின் போது பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளது. அதாவது சிறுவனின் தங்கையை காதலித்தவருக்கு வெற்றிச்செல்வன் உடந்தையாக இருந்துள்ளார். இதனால் வெற்றி செல்வனை தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு பகுதிக்கு அழைத்துச் சென்று 17 வயது சிறுவனும், மற்றொரு சிறுவனும் சேர்ந்து அரிவாளால் வெட்டி கொடூரமான முறையில் கொலை செய்துள்ளனர். அதன் பிறகு வெற்றி செல்வனின் உடலை ஒரு கிணற்றில் வீசிவிட்டு தப்பி சென்றது விசாரணையில் தெரிய வந்தது.

இதனையடுத்து காவல்துறையினர் சிறுவர்கள் கூறிய இடத்திற்கு சென்று வெற்றி செல்வனின் உடல் வீசப்பட்ட கிணற்றை ஆய்வு செய்தபோது அழுகிய நிலையில் சடலம் கிணற்றில் மிதந்தது. அந்த சடலத்தை காவல்துறையினர் மீட்டனர். ஆனால் உடல் அழுகிய நிலையில் இருந்ததால் தலை கிடைக்கவில்லை. இதன் காரணமாக கிணற்றில் உள்ள அனைத்து தண்ணீரையும் வெளியே எடுத்து விட்டு தலையை வெளியே எடுத்தனர். அதன் பிறகு பிரேத பரிசோதனைக்காக உடலை பாளையங்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |