கன்னியாகுமரி மாவட்டம் ஆரல்வாய்மொழி அருகிலுள்ள தோவாளைபுதூரில் சொர்ணப்பன் என்பவர் வசித்து வருகிறார். இவரது மகன் சுரேஷ்குமார் பி.காம் படித்துவிட்டு பெயிண்டிங் வேலையை காண்ட்ராக்ட் எடுத்து நடத்தி வருகிறார். இவர் அழகியபாண்டிபுரம் அருகில் உள்ள காட்டுப் புதூரில் இளம் பெண் ஒருவரை காதலித்து வந்தார். இதனிடையே அந்தப் பெண்ணுக்கு வேறு ஒரு இடத்தில் மாப்பிள்ளை பார்த்து திருமணம் செய்து வைக்க பெற்றோர் முடிவு செய்தனர். இந்நிலையில் நேற்று முன்தினம் மதியம் 12 மணிக்கு சுரேஷ்குமார் வீட்டிற்கு பூதப்பாண்டி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஜோசப்ராஜ் வந்து சுரேஷ் குமார் மீது காட்டுப்புதூரை சேர்ந்த ஒருவர் புகார் அளித்துள்ளதாகவும், இதுகுறித்து விசாரிக்க சுரேஷ்குமாரை போலீஸ் நிலையத்திற்கு அழைத்தார்.
அதன்பிறகு சுரேஷ்குமார் தனது மோட்டார் சைக்கிளில் பூதப்பாண்டி போலீஸ் நிலையத்திற்கு புறப்பட்டு சென்றார். ஆனால் மாலை 5 மணி ஆகியும் சுரேஷ்குமார் வீடு திரும்ப வில்லை என்பதால் சந்தேகமடைந்த அவரின் அண்ணன் சுமன் ஆனந்த் மற்றும் அவர் நண்பர்களுடன் பூதப்பாண்டி போலீஸ் நிலையத்திற்கு சென்று பார்த்தபோது அங்கு தம்பி இல்லாததால், காட்டுப்புதூருக்கு சென்றுள்ளார். அப்போது சிவன் கோயில் தெப்பக்குளம் அருகில் உள்ள ரோட்டோரத்தில் சுரேஷ்குமார் மோட்டார் சைக்கிள் நின்றதையெடுத்து அருகில் உள்ள தோட்டத்திற்க்கு சென்று பார்த்தபோது சுரேஷ்குமார் மயங்கிய நிலையில் கிடந்தார். அதனைத் தொடர்ந்து அவரின் அண்ணன் சுமன் தம்பியை மீட்டு ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். அங்கு டாக்டர்கள் பரிசோதித்துப் பார்த்துவிட்டு சுரேஷ்குமார் இறந்துவிட்டதாக கூறினர்.
இதுகுறித்து சுமன் ஆனந்த் பூதப்பாண்டி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரில் என் தம்பி காதலித்த பெண் தன்னை பெண் கேட்க வரும்படி சுரேஷ்குமாரிடம் கூறியுள்ளார். அதன்படி செப்டம்பர் மாதம் 18ஆம் தேதி இளம் பெண் வீட்டாருடன் நாங்கள் பேச்சுவார்த்தை நடத்தியபோது சுரேஷ்குமாருக்கு இளம் பெண்ணை திருமணம் செய்து வைக்க குடும்பத்தினர் மறுத்துவிட்டனர். சுரேஷ்குமார் அந்த இளம் பெண்ணுடன் பேசினால் அவ்வளவுதான் என்று பெண்ணின் அண்ணன்கள் மிரட்டினர். அதனைபோலவே எனது தம்பியை. அவன் காதலித்த உறவினர்கள் அழைத்துச் சென்று கொலை செய்ய வாயில் விஷத்தை ஊற்றியுள்ளனர். எனவே அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.
இந்தப் புகாரின்பேரில் சுரேஷ்குமார் சாவில் மர்மம் இருப்பதாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்கிடையில் சுரேஷ்குமாரின் உடற்கூறு பரிசோதனை ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனையில் நடந்தத முடிந்தது. அதற்கு முன்னதாகவே சுரேஷ்குமாரின் உறவினர்கள் ஆஸ்பத்திரி வளாகத்தில் குவிந்தனர். அவர் மரணத்துக்கு நியாயம் கிடைக்கும் வரை உடலை வாங்க மாட்டோம் என்றும் அவரது உறவினவர்கள் கொட்டும் மழையில் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுபற்றி தகவல் அறிந்து வந்த ஆசாரிபள்ளம் போலீசார் போராட்டம் நடத்தி வரும் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்.