Categories
அழகுக்குறிப்பு லைப் ஸ்டைல்

காதுகளை எப்படி பராமரிப்பது… என்பதை பார்ப்போமா …!!!

காதுகளை எப்படி பராமரிப்பது என்பதை இந்த செய்தி தொகுப்பில் காணலாம் :காதுகளை குடைய வேண்டாம்:

தினமும் காதுகளை குடைபவர்களுக்கு இது கொஞ்சம் அதிர்ச்சியான செய்தியாக தெரியலாம். அப்போது இந்த மெழுகு அல்லது அழுக்கு காது கால்வாய் வழியாக வெளியே தள்ளப்படுகிறது. எனவே தினமும் காதுகளை குடைவது அவசியமற்ற ஒன்றாகும். மக்களில் அதிகமானோர் பட்ஸ் என அழைக்கப்படும் க்யூ டிப்ஸை பயன்படுத்துகின்றனர். சிலர் காதுகளை சுத்தம் செய்ய காட்டன் துணிகளை பயன்படுத்துகின்றனர். உண்மையில் இதன் மூலம் நீங்கள் உங்கள் காதுகளை சுத்தப்படுத்துவதில்லை. அவற்றை மேலும் மோசமானதாக ஆக்குகிறீர்கள். இவற்றை நீங்கள் பயன்படுத்துவதால் வெளிநோக்கி தள்ளப்படுவதற்கு பதிலாக மெழுகு அல்லது அழுக்குகள் காதுகளின் கால்வாயின் உட்புறம் தள்ளப்படுகிறது.

காது அழுக்கை  நீக்கவும் :

நீங்கள் காது குழாயில் அடைப்பு போன்ற பிரச்சனைகளுக்கு உள்ளாகிறீர்கள் என்றால் மாயோ கிளினிக்கின் மருத்துவர்கள் காதுக்கு மேல் சூடான துணியை பயன்படுத்த சொல்கிறார்கள். அல்லது கெட்டியான அழுக்கை தளர்வாக்க சில துளிகள் எண்ணெய் அல்லது ஹைட்ரஜன் பெராக்சைடை பயன்படுத்தலாம். ஒருவேளை காது அடைப்பு மோசமடைந்துவிட்டால் உறிஞ்சலுடன் இணைக்கப்பட்ட குரேட் (ஒரு சிறிய வளைந்த உலோக கருவி) என்னும் கருவியை பயன்படுத்தி காதுகளை சுத்தப்படுத்தவும். வெது வெதுப்பான நீரை கொண்டு ஊசியை பயன்படுத்தி உங்கள் மருத்துவரால் காதில் உள்ள அழுக்கை அகற்ற முடியும்.
 

Categories

Tech |