Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

காதுகள் அறுக்கப்பட்டு மயங்கி கிடந்த பெண்…. அதிர்ச்சியடைந்த பொதுமக்கள்…. விசாரணையில் தெரிந்த உண்மை…!!

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள கங்கப்பாளையம் பகுதியில் சின்னபையன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு ஜெயலட்சுமி என்ற மனைவி உள்ளார். கடந்த 27-ஆம் தேதி வீட்டை விட்டு வெளியே சென்ற ஜெயலட்சுமி நீண்ட நேரமாகியும் வீட்டிற்கு திரும்பி வரவில்லை. இதற்கிடையில் வயல்வெளியில் ரத்த காயங்களுடன் 2 காதுகளும் அறுக்கப்பட்ட நிலையில் ஜெயலக்ஷ்மி மயங்கி கிடந்துள்ளார். அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு தர்மபுரி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் நடத்திய விசாரணையில் கூத்தப்பாடியை சேர்ந்த பூசாரியான மாதன் என்பவர் ஜெயலட்சுமியை தாக்கி நகையை பறித்து சென்றது தெரியவந்தது.

இதனையடுத்து போலீசார் மாதனை கைது செய்து விசாரித்ததில், ஜெயலட்சுமி தனது கணவர் இறந்த பிறகு மாதனுடன் தகாத உறவில் இருந்துள்ளார். பின்னர் ஜெயலட்சுமிக்கு வேறு ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டதாக தெரிகிறது. இதனால் கோபமடைந்த மாதன் ஜெயலட்சுமியை தாக்கியதால் அவர் மயங்கி விழுந்தார். அப்போது ஜெயலட்சுமி இறந்துவிட்டதாக நினைத்து இரண்டு காதுகளையும் அறுத்து நகையை பறித்து சென்றதாக மாதன் வாக்குமூலம் அளித்துள்ளார். அவரை போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Categories

Tech |