Categories
அரசியல் மாநில செய்திகள்

“காதுகள் பாவமில்லையா” 4 ஆடு வளர்த்து 5 லட்சம் வாட்ச்…. 345/- மெஷின் 10,000…. கலாய்த்த செந்தில் பாலாஜி…!!!

மாற்றுத்திறனாளிகளுக்கு உதவி வழங்கும் நிகழ்ச்சியில் மொத்தம் 95 மாற்றுத்திறனாளிகளுக்கு காது கேட்கும் கருவி, செயற்கை கால் உள்ளிட்ட உபகரணங்கள் வழங்கப்பட்டது. அப்போது பேசிய அண்ணாமலை, மாற்று திறனாளிகள் கஷ்டப்படுகிறார்கள் என்ற எண்ணத்தில் பாஜக உதவி செய்யவில்லை. இங்கே அனைவரும் சமமானவர்கள். ஒருவேளை உங்களுக்கு கஷ்டம் இருந்தால் அந்த கஷ்டம் கூட நிரந்தரம் கிடையாது. அதனால் பாஜக சார்பாக கொடுக்கக் கூடிய இந்த சிறு காணிக்கையை ஏற்றுக் கொள்ள வேண்டும். ஏழை மக்களை சந்திப்பதன் மூலமாகவே இறைவனை சந்திக்க வாய்ப்பு கிடைக்கும்.

பாஜக சேவை மூலமாக வளரும் கட்சி. 10,000 மதிப்பிலான காது கேளாதோருக்கான மெஷின் வழங்கப்படுவதாக கூறினார். ஆனால், அமேசானில் அதன் விலை 345மட்டும் என இருந்ததால் சர்ச்சையானது. இதுபற்றி அமைச்சர் செந்தில் பாலாஜி, 37 வயதுக்குள் படித்தது 20000 புத்தகம், 4 ஆடு வளர்த்து 5 லட்சம் வாட்ச் இன்று, 345/- மெஷின் 10,000. ஐம்புலன்களிலும் பெரும் பொய்களே என்றும், காதுகள் பாவமில்லையா என்றும்  விமர்சித்துள்ளார்.

Categories

Tech |