பீகாரில் பாட்னாவில் உள்ள மகாவீர் ஆரோக்கிய சஹ்ஸ்தானில் செவிலியர் ஒருவர் கடந்த ஜூலை 11ஆம் தேதி காது அறுவை சிகிச்சை செய்ய வந்த ரேகாவுக்கு நரம்புக்கு பதிலாக தமணியில் ஊசியை போட்டுள்ளார். இதனால் ரேகாவின் கை மெதுவாக பச்சை நிறமாக மாற ஆரம்பித்துள்ளது. உடனடியாக ரேகா கையில் ஏற்பட்ட மாற்றம் மற்றும் வலி பற்றி மருத்துவமனையில் புகார் அளித்துள்ளார். ஆனால் அந்த நேரத்தில் பணியில் இருந்து மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் அதனை கவனம் செலுத்தவில்லை அதற்கு மாறாக அவரை மருத்துவமனையில் இருந்து வெளியேறுமாறும் மிரட்டல் விடுத்துள்ளனர்.
மேலும் தவறான சிகிச்சையின் காரணமாக ஒரு கையை அவர் இழந்துள்ளார். கையை இழந்தது மட்டுமல்லாமல் நவம்பரில் அவருக்கு நடக்க இருந்த திருமணமும் நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவரது குடும்பத்தினர் கன்கர்பாக் காவல் நிலையத்தில் புகார் தெரிவித்துள்ளனர். ஆனால் காவல்துறை இதனை வழக்கு பதிவு செய்ய மறுத்ததாக கூறப்படுகிறது. இதனால் அவர்கள் தற்போது நியாயம் கேட்டு கோர்ட்டுக்கு சென்றுள்ளனர். மேலும் இந்த சம்பவம் பற்றி அவரது வழக்கறிஞர் ரூபம் பேசும் போது இந்த விஷயம் தொடர்பாக பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் மருத்துவமனை நிர்வாகத்திடமிருந்து நிறைய அழுத்தங்களை எதிர்கொண்டு வருகின்றார்கள்.
மேலும் மருத்துவமனையின் அலட்சியத்தால் நோயாளியின் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டது மட்டுமல்லாமல் அவரது கையும் துண்டாகி உள்ளது. இதற்கான நடவடிக்கை எடுக்க வேண்டும் குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுப்பது மட்டுமில்லாமல் நோயாளிக்கு உரிய இழப்பீடு கிடைக்க வேண்டும் எனவும் இந்த வழக்கில் அவர் நிச்சயம் வெற்றி பெறுவார் என நான் உறுதியாக நம்புகிறேன் என வழக்கறிஞர் கூறியுள்ளார்.