தங்க கம்மலை பறித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள பூச்சிவிளாகம் பகுதியில் தங்க கிருஷ்ணன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு விஜய நிர்மலா என்ற மனைவி உள்ளார். இவர் கீழத்தாரவிளை சாலையோரம் இருக்கும் பொருட்களை தனது கால்நடைகளுக்காக பிடுங்கி கொண்டிருந்தார். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த 2 மர்ம நபர்கள் இந்த பகுதியில் மெக்கானிக் கடை இருக்கிறதா? என நிர்மலாவிடம் கேட்டுள்ளனர்.
அவர் பதில் கூறிக் கொண்டிருக்கும் போதே ஒருவர் நிர்மலாவின் காதல் அணிந்திருந்த தங்க கம்மலை பிடித்து இழுத்து பறித்தார். இதனால் காது கிழிந்து ரத்தம் வடிந்த நிலையில் நிர்மலா சத்தம் போட்டதால் மர்ம நபர்கள் அங்கிருந்து தப்பி சென்றனர். ஆனாலும் சிறிது தூரம் நிர்மலா அவர்கள் பின்னாலேயே ஓடினார். இதுகுறித்து நிர்மலா ராஜாக்கமங்கலம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் மர்ம நபர்களை தீவிரமாக தேடி வருகின்றனர்.