இளம்பெண் ஒருவர் திருமணத்திற்கு 7 நாட்கள் மட்டுமே உள்ள நிலையில் தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தூத்துக்குடியில் வசிக்கும் தம்பதிகள் சுடலையாண்டி – ஆறுமுகம். இவர்களுக்கு சந்தன செல்வி, விஜயலட்சுமி என்ற இரு மகள்களும், இசக்கி தாஸ் என்ற ஒரு மகனும் உள்ளனர். இதில் இளைய மகள் விஜயலட்சுமிக்கு வருகின்ற 10ம் தேதி திருமணம் செய்ய நிச்சயயிக்கப்பட்டிருந்தது. இதனால் திருமணத்திற்கான வேலைகள் நடைபெற்றுக் கொண்டிருந்துள்ளது. இந்நிலையில் சம்பவத்தன்று அதிகாலை வழக்கம் போல சுடலையாண்டி மற்றும் அவருடைய மனைவி இருவரும் கடைக்கு சென்றுள்ளனர்.
மேலும் மூத்த மகள் சந்தன செல்வி எழுந்து சமயலறைக்கு சென்றபோது, விஜயலட்சுமி தூக்கில் தொங்கியதை கண்டு அதிர்ச்சியில் அலறியுள்ளார். இதை கேட்டு அக்கம் பக்கத்தினர் மற்றும் அவருடைய பெற்றோர் ஓடி வந்து பார்த்த போது மகள் சடலமாக கிடந்ததை பார்த்து கதறி அழுதுள்ளனர். இதையடுத்து இச்சம்பவம் குறித்து தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்துள்ளனர்.
இதையடுத்து நடத்திய விசாரணையில், “விஜயலட்சுமி தனது குடும்பத்தாரிடம் எனக்கு சரிவர காது கேட்காது எனவே எனக்கு திருமணம் வேண்டாம்” என்று கூறியதாக தெரிகிறது. ஆனால் குடும்பத்தினர் அவரை சமாதானப்படுத்தி திருமணத்துக்கு சம்மதிக்க வைத்துள்ளனர். இந்நிலையில் திருமணத்திற்கு 7 நாட்களே இருக்கும் நிலையில் விஜயலட்சுமி தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் மேலும் விசாரணை விசாரணை நடத்தி வருகின்றனர்.