காது வலி பிரச்சனையால் அவதிப்படுபவர்களுக்கு சில டிப்ஸ்களை தெரிந்து கொள்ளுங்கள்.
காது வலி என்பது சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் பாதிக்கும் ஒரு விஷயம். இதனை எளிதாக எடுத்துக் கொள்ளக் கூடாது. இது சைனஸ், டான்சில், கழுத்து எலும்பு தேய்மானம் போன்ற பிரச்சினைகளுக்கு அறிகுறியாக கூட இருக்கலாம். இரண்டு காது தொற்று உள்ளது. வெளிப்புற காது தொற்று, மற்றொன்று நடுப்பகுதி தொற்று. வெளிப்புறத் தொற்றுக்கு காதுக்குள் வீக்கம், கேட்கும் திறன் குறைவு, நீர் வெளியேற்றம், காய்ச்சல் போன்ற அறிகுறிகள் ஏற்படும்.
நடுப்பகுதிக்கு தொற்றுக்கு காது கேளாமை, காது அரிப்பு, வாந்தி, காய்ச்சல் உள்ளிட்ட அறிகுறிகள் தென்படும். இது போன்ற அறிகுறி இருந்தால் அலட்சியம் காட்டாதீர்கள். உடனே மருத்துவரை அணுகுங்கள். இதற்கு சில வீட்டு வைத்தியம் நீங்கள் பின்பற்றலாம். வெதுவெதுப்பான ஆலிவ் எண்ணெய் காது வலிக்கு பெரிய மாற்றமாக இருக்கும். அதனை சூடாக்கி சில சொட்டுகளை காதில் ஊற்றினால் காது வலி சற்று குறைய வாய்ப்புண்டு.
அதை தவிர்த்து வெங்காயத்தை ஒரு பேஸ்ட் போன்று அரைத்து காதில் வீக்கம் இருந்தால் அந்த இடத்தில் தடவி வர நிவாரணம் கிடைக்கும். வெளிப்புற காதில் ஏரிச்சல் இருந்தால் லாவண்டர் எண்ணெய் ஊற்றினால் நல்ல பலன் கிடைக்கும். மூச்சுக்குழாய் மற்றும் காதுகளில் சேர்ந்திருக்கும் நீரை வெளியேற்ற கொஞ்சம் யூக்கலிப்டஸ் தைலத்தை ஊற்றி நீரை கொதிக்க வைத்து ஆவி சுவாசியுங்கள். இவ்வாறு செய்யும் போது நமது காது வலியும் குணமாகும். காதில் தண்ணீர் இருந்தால் கூட அது வடிந்து விடும்.