ரயில் பயணிகளின் டிக்கெட்களை பரிசோதிப்பதற்காக, கையடக்க கணினி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த கையடக்க கணினி மூலம், டிக்கெட்டை எளிதாக சரிபார்க்க முடியும். இதன் மூலம் ரயில் புறப்பட்ட 15-20 நிமிடங்களில் பயணியர் பட்டியலை தெரிவிக்க வேண்டிய நிலை உள்ளது. இதனால், பயணிகள் தங்கள் டிக்கெட்டில் குறிப்பிட்டபடி, ஏற வேண்டிய நிலையத்தில் கட்டாயம் ஏறிவிட வேண்டும்; இல்லாவிட்டால், டிக்கெட் ரத்தாகும் ரயிலில் பயணச்சீட்டு உறுதியானவர்கள் கடைசி நேரத்தில் பயணத்தை ரத்து செய்வதால், நாள் ஒன்றுக்கு 7000 இருக்கைகள் காலியாகும் நிலை உள்ளது.
எனவே, கையடக்க டேப்லட் கருவிகளைக் கொண்டு காலியான சீட்களை அடையாளம் கண்டு, தேவைப்படுபவர்களுக்கு ஒதுக்கும் முறையை ரயில்வே வெற்றிகரமாக அமல்படுத்த தொடங்கியுள்ளது. இதனால், ஒவ்வொரு நாளும் RAC மற்றும் காத்திருப்பு பட்டியலில் இருக்கும் 7,000 பேருக்கு இருக்கைகள் ஒதுக்கப்படுகிறது. பயணிகள், இந்த வசதியை பயன்படுத்திக் கொள்ளவும்.