Categories
தேசிய செய்திகள்

“காத்துவாக்குல ரெண்டு கல்யாணம்” குடுத்து வச்சவண்டா…. யாரையும் விடமுடியாது…. குமுறும் 90’s கிட்ஸ்…!!!!!!!!

ஜார்க்கண்ட் மாநிலம், லொஹர்தாக பாந்தரா பகுதியைச் சேர்ந்தவர் சந்தீப் ஓரான். இவர் அதே கிராமத்தைச் சேர்ந்த குசமும் பந்தா என்ற பெண்ணை காதலித்து மூன்று ஆண்டுகளாக லிவிங் வாழ்க்கையில் இருந்துவந்துள்ளார். இவர்களுக்கு ஒரு குழந்தையும் உள்ளது. இதற்கிடையில் மேற்கு வங்கத்தில் செங்கள் சூளை வேலைக்கு சென்ற சந்தீப்அங்கு, ஸ்வாதி குமாரி என்ற பெண்ணுடன் பழகிவந்தார். நாளடைவில் அது காதலாக மாறியுள்ளது. இது பற்றி அறிந்த சந்தீப்பின் குடும்பத்தினர் ஸ்வாதியின் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

அவரின் இந்த காதல் விவகாரம் கிராம பஞ்சாயத்து வரை சென்றுள்ளது. ஆனால் சந்தீப் இருவரையும் காதலிப்பதாகக் கூறி விடாப்பிடியாக இருந்துவந்துள்ளார். இதையடுத்து கிராம மக்கள் முன்னிலையில் இரண்டு காதலிகளின் நெற்றியில் திலகமிட்டு மனைவிகளாக ஏற்றுக்கொண்டுள்ளார். இது குறித்து பேசிய சந்தீப், “இரண்டு பெண்களைத் திருமணம் செய்வதில் சட்ட சிக்கல் இருக்கலாம். ஆனால் நான் இருவரையும் நேசிக்கிறேன். அவர்களில் ஒருவரை என்னால் விட்டுவிட முடியாது” என தெரிவித்துள்ளார்.

Categories

Tech |