Categories
சினிமா தமிழ் சினிமா

‘காத்துவாக்குல ரெண்டு காதல்’… டிசம்பர் இறுதியில் படப்பிடிப்பு ஆரம்பம்…!!

விக்னேஷ் சிவன் இயக்கும் ‘காத்துவாக்குல ரெண்டு காதல்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு டிசம்பர் இறுதியில் தொடங்கும் என படக்குழு அறிவித்துள்ளது.

தமிழ் திரையுலக பிரபல இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நடிகர் விஜய் சேதுபதி, நடிகை நயன்தாரா மற்றும் நடிகை சமந்தா ஆகியோர் நடிக்கவுள்ள திரைப்படம் ‘காத்துவாக்குல ரெண்டு காதல்’. ஏற்கனவே  இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நடிகர் விஜய் சேதுபதி மற்றும் நடிகை நயன்தாரா நடித்த ‘நானும் ரவுடி தான்’ திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இதையடுத்து மீண்டும் இவர்கள் கூட்டணியில் உருவாகவுள்ள இந்த திரைப்படத்தின் மீது ரசிகர்களின் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

பல மாதங்களுக்கு முன் தொடங்கவிருந்த இதன் படப்பிடிப்பு கொரோனா பரவலால் நடத்த முடியாமல் போனது. தற்போது இந்த திரைப்படத்தின் ஆரம்பகட்ட பணிகள் நடைபெற்று வருவதாகவும் படப்பிடிப்பு டிசம்பர் இறுதியில் தொடங்கவுள்ளதாகவும்  தகவல் வெளியாகியுள்ளது. இந்த திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைக்கவுள்ளார். செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் நிறுவனம் இந்த திரைப்படத்தை தயாரிக்கிறது.

Categories

Tech |