இயக்குனர் விக்னேஷ் சிவன் தனது சமூக வலைதளப் பக்கத்தில் ரசிகரின் கேள்விக்கு பதிலளித்துள்ளார்.
தமிழ் திரையுலகில் கடந்த 2012-ஆம் ஆண்டு வெளியான போடா போடி படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் விக்னேஷ் சிவன் . இதை அடுத்து இவர் இயக்கத்தில் விஜய்சேதுபதி, நயன்தாரா நடிப்பில் வெளியான நானும் ரவுடிதான் திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது இவர் காத்துவாக்குல ரெண்டு காதல் படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தில் விஜய்சேதுபதி, நயன்தாரா, சமந்தா ஆகியோர் நடித்து வருகின்றனர். மேலும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.
சமீபத்தில் இந்த படத்தின் முதல் பாடல் வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. இந்நிலையில் சமூக வலைதளப் பக்கத்தில் ரசிகர் ஒருவர் விக்னேஷ் சிவனிடம் ‘காத்துவாக்குல ரெண்டு காதல் படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து விட்டதா?’ என கேட்டுள்ளார். இதற்கு விக்னேஷ் சிவன் ‘இன்னும் 15 நாள் படப்பிடிப்பு மட்டுமே மீதம் இருக்கிறது’ என பதிலளித்துள்ளார். மேலும் வருகிற ஜூலை மாதம் இந்த படத்தின் இரண்டாவது பாடல் வெளியாகும் என தெரிவித்துள்ளார்.