Categories
சினிமா தமிழ் சினிமா

‘காத்துவாக்குல ரெண்டு காதல்’ படத்திலிருந்து விலகிய சமந்தா… என்ன காரணம் தெரியுமா? …!!

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவாகும் ‘காத்துவாக்குல ரெண்டு காதல்’ படத்திலிருந்து நடிகை சமந்தா விலகியதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழ் திரையுலகில் பிரபல இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவாகும் ‘காத்துவாக்குல ரெண்டு காதல்’ படத்தில் நடிகர் விஜய் சேதுபதி, நடிகை நயன்தாரா மற்றும் நடிகை சமந்தா ஆகியோர் நடிக்கயிருந்தனர். இதன் மூலம் நயன்தாராவுக்கும் சமந்தாவுக்கும் நல்ல நட்புறவு ஏற்பட்டிருந்தது .

இந்நிலையில் இந்த படத்திலிருந்து நடிகை சமந்தா விலகியதாக தகவல் வெளியாகியுள்ளது. படத்தில் தனது கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் குறைவதால் இந்த முடிவை சமந்தா எடுத்துள்ளதாகவும், இவருக்கு பதில் நடிகை ராஷ்மிகாவை நடிக்க வைக்க படக்குழு முயற்சிப்பதாகவும் கூறப்படுகிறது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Categories

Tech |