Categories
சினிமா தமிழ் சினிமா

‘காத்துவாக்குல ரெண்டு காதல்’ படத்தின் புதிய அப்டேட்… எதிர்பார்ப்பில் ரசிகர்கள்…!!!

இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவாகிவரும் காத்துவாக்குல ரெண்டு காதல் படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது.

தமிழ் திரையுலகில் கடந்த 2012-ஆம் ஆண்டு வெளியான போடாபோடி படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் விக்னேஷ் சிவன். இதையடுத்து இவர் இயக்கத்தில் விஜய் சேதுபதி, நயன்தாரா நடிப்பில் வெளியான நானும் ரவுடிதான் திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இதன்பின் விக்னேஷ் சிவன் நடிகர் சூர்யாவின் தானா சேர்ந்த கூட்டம் படத்தை இயக்கியிருந்தார். தற்போது இவர் காத்துவாக்குல ரெண்டு காதல் படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தில் விஜய்சேதுபதி, நயன்தாரா, சமந்தா ஆகியோர் நடித்து வருகின்றனர்.

Vignesh Shivan on Kaathuvaakula Rendu Kaadhal: We planned this script two  years ago - Movies News

மேலும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். சமீபத்தில் இந்த படத்தின் முதல் பாடல் வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. இந்நிலையில் சமூக வலைதளப் பக்கத்தில் விக்னேஷ் சிவனிடம் ரசிகர் ஒருவர் காத்துவாக்குல ரெண்டு காதல் படத்தின் அடுத்த பாடல் எப்போது வெளியாகும்? என கேட்டுள்ளார். இதற்கு விக்னேஷ் சிவன் வருகிற ஜூலை மாதம் வெளியாகும் என தெரிவித்துள்ளார். இந்த பாடலுக்காக ரசிகர்கள் ஆவலுடன் எதிர்ப்பார்த்து கொண்டிருக்கின்றனர்.

Categories

Tech |