Categories
சினிமா தமிழ் சினிமா

‘காத்துவாக்குல ரெண்டு காதல்’ படப்பிடிப்பில் இணைந்த முக்கிய பிரபலம்… வைரலாகும் புகைப்படம்…!!!

நடிகை சமந்தா காத்துவாக்குல ரெண்டு காதல் படத்தின் படப்பிடிப்பில் இணைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழ் திரையுலகில் போடா போடி, நானும் ரவுடி தான், தானா சேர்ந்த கூட்டம் போன்ற படங்களை இயக்கி பிரபலமடைந்தவர் விக்னேஷ் சிவன். தற்போது இவர் விஜய் சேதுபதி ஹீரோவாக நடிக்கும் காத்துவாக்குல ரெண்டு காதல் படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தில் நயன்தாரா, சமந்தா இருவரும் கதாநாயகிகளாக நடிக்கின்றனர். செவன் ஸ்க்ரீன் ஸ்டூடியோஸ் நிறுவனம் மற்றும் ரௌடி பிக்சர்ஸ் இணைந்து தயாரிக்கும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.

https://www.instagram.com/p/CSrNH6EoSzr/?utm_source=ig_embed&ig_rid=74b5c68d-e5e5-49bb-a438-688d08984201

சமீபத்தில் இந்த படத்தின் முதல் பாடல் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் காத்துவாக்குல ரெண்டு காதல் படப்பிடிப்பில் நடிகை சமந்தா இணைந்துள்ளார். இதனை அவரே தனது சமூக வலைதளப் பக்கத்தில் புகைப்படத்துடன் தெரிவித்துள்ளார். தற்போது இந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Categories

Tech |