Categories
சினிமா தமிழ் சினிமா

‘காத்துவாக்குல ரெண்டு காதல்’ படத்தின் அடுத்த பாடல்… கலக்கலான புரோமோ வீடியோ…!!!

காத்துவாக்குல ரெண்டு காதல் படத்தின் இரண்டாவது பாடல் புரோமோ வீடியோ வெளியாகியுள்ளது.

தமிழ் திரையுலகில் போடா போடி படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் விக்னேஷ் சிவன். இதை தொடர்ந்து இவர் இயக்கத்தில் வெளியான நானும் ரௌடி தான் படம் சூப்பர் ஹிட் அடித்தது. இதன்பின் இவர் சூர்யாவின் தானா சேர்ந்த கூட்டம் படத்தை இயக்கியிருந்தார். தற்போது விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிப்பில் காத்துவாக்குல ரெண்டு காதல் படம் உருவாகி வருகிறது. இந்த படத்தில் நயன்தாரா, சமந்தா இருவரும் கதாநாயகிகளாக நடிக்கின்றனர். செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ மற்றும் ரௌடி பிக்சர்ஸ் நிறுவனம் இணைந்து தயாரிக்கும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.

கடந்த சில மாதங்களுக்கு முன் இந்த படத்தின் முதல் பாடல் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இதைத் தொடர்ந்து இந்த படத்தின் இரண்டாவது பாடல் வருகிற செப்டம்பர் 18-ஆம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்திருந்தது. இந்நிலையில் ‘காத்துவாக்குல ரெண்டு காதல்’ படத்தின் இரண்டாவது பாடலான ‘டூ டூ டூ’ பாடலின் புரோமோ வீடியோ வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது.

Categories

Tech |