காத்துவாக்குல ரெண்டு காதல் படத்தில் நயன்தாராவின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது.
தமிழ் திரையுலகில் முன்னணி இயக்குனராக வலம் வரும் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் காத்துவாக்குல ரெண்டு காதல். முக்கோண காதல் கதையாக உருவாகியுள்ள இந்த படத்தில் விஜய் சேதுபதி கதாநாயகனாகவும், நயன்தாரா, சமந்தா இருவரும் கதாநாயகிகளாகவும் நடித்துள்ளனர். செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ நிறுவனம் மற்றும் ரவுடி பிக்சர்ஸ் நிறுவனம் இணைந்து தயாரிக்கும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார் . இன்று காலை இந்த படத்தின் இரண்டு பர்ஸ்ட் லுக் போஸ்டர்களை படக்குழு வெளியிட்டது.
KANMANI for you all 🎥📸#KaathuVaakulaRenduKaadhal #KRKFL #KRKFirstLooks pic.twitter.com/nWExL5POmc
— Nayanthara✨ (@NayantharaU) November 15, 2021
அதாவது விஜய் சேதுபதி நடித்துள்ள ரேம்போ கேரக்டரின் போஸ்டரும், சமந்தா நடித்துள்ள காதீஜா கேரக்டரின் போஸ்டரும் வெளியாகியிருந்தது. இந்நிலையில் காத்துவாக்குல ரெண்டு காதல் படத்தில் நயன்தாராவின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. அதில் இந்த படத்தில் நயன்தாரா கண்மணி என்ற கேரக்டரில் நடித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த படம் வருகிற டிசம்பர் மாதம் தியேட்டர்களில் ரிலீஸாக உள்ளது குறிப்பிடத்தக்கது.