Categories
சினிமா தமிழ் சினிமா

காந்தாரா படத்தின் வராஹ ரூபம் பாடல்…. தடை நீங்கியதா?…. வெளிவரும் புது தகவல்கள்….!!!!

கேஜிஎப் திரைப்படங்களின் 2 பாகங்களை அடுத்து கன்னடத்தில் இருந்து வெளியாகி கவனத்தை ஈர்த்த திரைப்படம் காந்தாரா. கர்நாடகாவில் இப்படத்திற்கு கிடைத்த வெற்றியை அடுத்து தென்னிந்திய மொழிகள் மற்றும் பாலிவுட் என 4 மொழிகளிலும் இப்படம் டப்பிங் செய்யப்பட்டு வெளியாகி, அனைத்து இடங்களிலும் வரவேற்பையும் நல்ல வசூலையும் பெற்றது. இந்நிலையில் படம் வெளியான சில வாரங்களிலேயே இப்படத்தில் இடம் பெற்ற வராஹ ரூபம் என்ற பாடல் மலையாள திரையுலகில் தனி இசைக் குழுவாக இயங்கிவரும் தாய்க்குடம் பிரிட்ஜ் என்பவர்கள் ஏற்கனவே உருவாக்கிய நவரசம் என்ற பாடலின் காப்பி எனும் சர்ச்சை எழுந்தது.

இதனை காந்தாரா பட இசையமைப்பாளர் அஜ்னீஷ் லோக்நாத் மறுத்தாலும் தாய்க் குடம் பிரிட்ஜ் இசைக்குழு, கேரளாவில் கோழிக்கோடு மாவட்ட நீதிமன்றத்தில் இது தொடர்பாக வழக்கு தொடர்ந்தது. அதன்பின் காந்தாரா திரைப்படத்தில் வராஹ ரூபம் பாடலை பயன்படுத்த நீதிமன்றமானது தடைவிதித்தது. நீதிமன்ற உத்தரவை அடுத்து படத்தில் இருந்து அப்பாடல் நீக்கப்பட்டு அதற்கு பதில் வேறு ஒரு பாடல் இணைக்கப்பட்டது.

தற்போது ஒடிடி தளத்தில் வராஹ ரூபம் பாடல் நீக்கப்பட்டு புது பாடல் இடம்பெற்றுள்ளது. இருப்பினும் ரசிகர்கள் இந்த புது பாடல் குறித்த தங்களது அதிருப்தியை தொடர்ந்து வெளிப்படுத்தி வந்தனர். இந்நிலையில் இந்த வழக்கில் புது திருப்பமாக வராஹ ரூபம் பாடலுக்கும், நவரசம் பாடலுக்கும் சம்பந்தமில்லை. மீண்டும் வராஹ ரூபம் பாடலையே காந்தாரா திரைப்படத்தில் பயன்படுத்திக் கொள்ளலாம் என்று கேரள நீதிமன்றம் தடையை நீக்கி இருப்பதாக செய்தி பரவியது. ஆனால் இத்தகவல் உண்மையில்லை என்கிறார்கள்.

Categories

Tech |