Categories
அரசியல்

“காந்திக்கு பிடித்த பாடல் நீக்கம்!”…. மத்திய அரசுக்கு எம்.பி வெங்கடேசன் கடும் கண்டனம்….!!!!

ஆண்டுதோறும் குடியரசு தின விழா நிறைவு பெற்ற பிறகு படைகள் பாசறைக்கு திரும்பும் நிகழ்ச்சி ஜனவரி 29-ஆம் தேதி அன்று நடத்தப்படும். இந்த நிகழ்ச்சியின் போது 16 டிரம்பட் இசைக்கலைஞர்கள், 44 பீகில் வாசிப்பாளர்கள், 6 பேண்டு வாத்திய கலைஞர்கள், 75 ட்ரம்மர்கள் இணைந்து பாடல்களை இசைப்பது வழக்கம்.

மேலும் 1950-ஆம் ஆண்டிலிருந்து மகாத்மா காந்திக்கு பிடித்த பாடலான “Abide With me” என்ற பாடலும் இசைக்கப்பட்டு வருகிறது. ஆனால் மத்திய அரசு இந்த ஆண்டு ‘அபைட் வித் மீ” ஆங்கில பாடல் நீக்கப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளது. இந்த பாடலை 1847-ல் ஸ்காட்லாந்தை சேர்ந்த ஹென்றி பிரான்சிஸ் லைட் என்ற கிறிஸ்தவர் இயற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் பலரும் இந்த பாடல் நீக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

அந்த வகையில் பாடல் நீக்கத்திற்கு கண்டனம் தெரிவித்த மதுரை எம்.பி., சு.வெங்கடேசன் திருவாசகத்தை போன்று மனதை உருக்கும் பாடல் தான் அந்த கிறிஸ்தவர் எழுதிய பாடல். மேலும் மகாத்மா காந்திக்கு மிகவும் பிடித்த பாடல் என்று கூறி சூழும் இருளின் அச்சம் போக்கும் ஒளியே இறைவன், ஒளியை நீக்கி அச்சம் பரப்பும் இருளே சாத்தான் என்று தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

Categories

Tech |