Categories
தேசிய செய்திகள்

“காந்தி ஆசிரமம்”…. ராட்டை சுற்றி நூல் நூற்ற பிரபல நாட்டு அதிபர்….!!!!

இந்தியாவிற்கு இரண்டு நாள் பயணமாக இங்கிலாந்து பிரதமரான போரிஸ் ஜான்சன் வந்துள்ளார். இவர் பிரதமராக பொறுப்பேற்ற பின் இந்தியா வருவது இதுவே முதன் முறையாகும். இங்கிலாந்திலிருந்து தனிவிமானம் வாயிலாக குஜராத் அகமதாபாத் விமான நிலையம் வந்த அவரை குஜராத் முதல்-மந்திரி புபேந்திர பட்டேல், ஆளுநர் உள்ளிட்டோர் பூங்கொத்து கொடுத்து உற்சாக வரவேற்பு அளித்தனர். அதன்பின் அகமதாபாத்திலுள்ள காந்தி ஆசிரமத்திற்கு போரிஸ் ஜான்சன் சென்றார். அப்போது ஆசிரமத்தை பார்வையிட்ட அவர், அங்குள்ள ராட்டினத்தில் நூல் நூற்றார். அதனை தொடர்ந்து ஆசிரமத்தில் வைக்கப்பட்டுள்ள புத்தகத்தில் கையெழுத்திட்டார்.

பின் அகமதாபாத்திலுள்ள முன்னணியான வர்த்தக நிறுவனங்களின் தலைவர்களை அவர் சந்தித்து பேசினார். அதன்பின் அதானி குழுமத்தின் தலைவர் கவுதம் அதானியை அகமதாபாத்தில் சந்தித்து பேசினார். அதனை தொடர்ந்து இன்று மாலை டெல்லி போகும் போரிஸ்ஜான்சன் நாளை பிரதமர் நரேந்திர மோடியை சந்திக்க இருக்கிறார். உக்ரைன் விவகாரம், இந்தோ-பசிபிக் பகுதி பாதுகாப்பு உள்ளிட்ட சர்வதேச விவகாரங்கள் தொடர்பாக இருநாட்டு தலைவர்களும் ஆலோசிக்க இருக்கின்றனர். அதுமட்டுமல்லாமல் இருதரப்பு உறவுகள், பாதுகாப்பு, தொழில்நுட்பம், பொருளாதாரம், எரிசக்தி உள்ளிட்டவை தொடர்பாக இருவரும் பேச்சுவார்த்தை நடத்த இருகின்றனர். இருநாடுகள் இடையில் தடையில்லாத வர்த்தக உடன்படிக்கை குறித்தும் ஆலோசிக்கப்படும் என்று தகவல் வெளியாகியுள்ளது.

Categories

Tech |