Categories
சினிமா தமிழ் சினிமா

“காந்தி குறித்து சர்ச்சை பதிவு”…. “RRR” பட நடிகரை விளாசும் நெட்டிசன்ஸ்….!!!!!

காந்தி குறித்து சர்ச்சை அளிக்கும் வகையில் ட்விட்டர் பதிவிட்டதால் ராகுல் ராமகிருஷ்ணாவை நெட்டிசன்கள் கடுமையாக விளாசி வருகின்றார்கள் .

இயக்குனர் ராஜமௌலி இயக்கத்தில் சென்ற வருடம் வெளியான ஆர் ஆர் ஆர் திரைப்படத்தில் ஜூனியர் என்டிஆர் இன் நண்பராக நடித்திருந்தார் ராகுல் ராமகிருஷ்ணா. இவர் அனுதீப் இயக்கத்தில் வெளியான ஜதி ரத்னலு திரைப்படத்திலும் காமெடியானாக நடித்திருந்தார். மேலும் இவர் அர்ஜுன் ரெட்டி, கீதா கோவிந்தம் உள்ளிட்ட திரைப்படங்களிலும் நடித்து பிரபலமானார். இவர் இனிமேல் சினிமாவில் நடிக்க மாட்டேன் என அதிகாரப்பூர்வமாக அறிவித்துவிட்டார்.

இதனால் இவர் அரசியலில் சேர போகின்றாரா என்று கேள்வியும் எழுந்தது. இந்த நிலையில் அக்டோபர் இரண்டாம் தேதியான நேற்று நாடு முழுவதும் காந்தி ஜெயந்தி கொண்டாடிய நிலையில் இவர் தனது ட்விட்டர் பக்கத்தில் “I don’t think Gandhi was great” என்ன என்ன ட்விட் செய்திருந்தார். இதை பார்த்த நெட்டிசன்கள் நீங்க இப்படி சொல்லி கிடைத்திருக்கும் சுதந்திரம் வாங்க போராடியவர்களில் அவரும் முக்கியமானவர். கொஞ்சம் மரியாதையுடன் பேசுங்கள் என விளாசினர். மேலும் சிலரோ ராகுல் காந்தியா? சோனியா காந்தியா? இல்ல ஜோனிடா காந்தியா என அவரை துவம்சம் செய்து வருகின்றார்கள்.

காந்தி கிரேட் இல்லை

Categories

Tech |