காந்தி ஜெயந்தி முன்னிட்டு தமிழக அரசு மிக முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
காந்தி ஜெயந்தியை முன்னிட்டு கிராம சபை கூட்டங்கள் நடத்த தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. சுழற்சி முறையை பயன்படுத்தி அக்டோபர் இரண்டாம் தேதி காலை 11 மணியளவில் கிராம சபை கூட்டங்கள் நடத்த உத்தரவிடப்பட்டிருக்கிறது. மேலும் இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்ட அறிவிப்பில் கூறப்பட்டிருப்பதாவது, குறைவின் வரம்பின்படி உறுப்பினர்கள் வருகையை உறுதி செய்து கிராம சபை கூட்டம் நடத்தப்பட வேண்டும். கிராம சபை கூட்டம் அனைத்து ஊராட்சிகளிலும் நடைபெற உரிய நடவடிக்கை மேற்கொள்ள அறிவுறுத்த வேண்டும்.
மேலும் கிராம ஊராட்சியின் தணிக்கை அறிக்கை, கொசுக்கள் மூலம் டெங்கு பரவுவதை தடுப்பது பற்றி விவாதிக்க அறிவுறுத்த வேண்டும். அதேபோல வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் பற்றி கிராம சபை கூட்டத்தில் விவாதிக்க வேண்டும். அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம், கலைஞர் வீடு வழங்கும் திட்டம், கணக்கெடுப்பு பணிகள் பற்றி விவாதிக்கப்பட வேண்டும். மேலும் கிராமசபை கூட்டம் பற்றிய அறிக்கை அக்டோபர் 12ம் தேதிக்குள் அனுப்ப மாவட்ட ஆட்சியர்களுக்கு அறிக்கையில் உத்தரவிடப்பட்டிருக்கிறது.