Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

காந்தி மார்க்கெட்டை திறக்கக்கோரி வியாபாரிகள் போராட்டம் …!!

திருச்சி காந்தி மார்க்கெட்டை திறக்கக்கோரி வரும் 25-ஆம் தேதி முதல் நான்கு நாட்கள் கடையடைப்பு போராட்டம் நடத்த வியாபாரிகள் முடிவு செய்துள்ளனர்.

கொரோனா பரவல் காரணமாக திருச்சி காந்தி மார்க்கெட் கடந்த மார்ச் 24-ஆம் தேதி மூடப்பட்டது. அதனை தொடர்ந்து பால்பண்ணை பகுதியிலும்  தற்போது பொன்மலை ஜி கார்னர் பகுதியிலும் மொத்த மற்றும் சில்லறை வியாபாரம் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் திருச்சி ஜி கார்னர் மைதானத்தில் காய்கறி கனிகள் மற்றும் பூ மற்றும் மொத்த சில்லறை வியாபார விற்பனை சங்கங்களின் நிர்வாகிகள் தொழிலாளர் சங்கங்கள் ஒருங்கே கலந்தாலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் காந்தி மார்க்கெட்டை திறக்கக்கோரி 25-ஆம் தேதி முதல் நான்கு தினங்கள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபடுவது என தீர்மானிக்கப்பட்டது.

Categories

Tech |