Categories
மாவட்ட செய்திகள்

கானத்தூரில் ரூ.40,00,000 திருட்டு…. 2 வாலிபர் கைது….!!

சென்னை கானத்தூர் ரெட்டியார் குப்பம் பகுதியில் பதர்ஜஹான் என்பவர் (45) வசித்துவருகிறார். இவருடைய கணவர் கடந்த 8 ஆண்டுகளுக்கு முன் உயிரிழந்துவிட்டார். இவருடைய மகன் அமெரிக்காவில் படித்து வருகிறார். இந்நிலையில் பதர்ஜஹான் வீட்டில் வைத்திருந்த ரூ.40,00,000 திடீரென காணாமல் போனது. இதுகுறித்து கானத்தூர் போலீசார் புகார் அளித்துள்ளார்.

இந்த புகாரின் பேரில் கானத்தூர் குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் பாலமுருகன் தலைமையில் தனிப்படை அமைத்து சந்தேகத்தின் அடிப்படையில் பிரபாகரன் மற்றும் டேனியல் ஆகியோரின் விவரங்கள் சேகரிக்கப்பட்டது. இதில் இவர்கள் இருவரும் புதுச்சேரியில் பதுங்கியுள்ளனர் என்று தெரியவந்துள்ளது. இதையடுத்து தனிப்படை போலீசார் அவர்கள் இருவரையும் கையும் களவுமாக கைது செய்து விசாரணை நடத்தினர்.

இந்த விசாரணையில், இவர்கள் இருவரும் காரைப்பாக்கத்தில் உள்ள தனியார் ஐ.டி. நிறுவனத்தில் பணிபுரிந்து வந்துள்ளார் என்று தெரியவந்தது. மேலும் திருடிய பணத்தை அவர்கள் வசித்து வந்த காரப்பாக்கத்தில் உள்ள தனியார் அடுக்குமாடி குடியிருப்பில் வைத்திருப்பதாக தெரியவந்தது. இதையடுத்து அவர்களிடம் ரூ.27,12,000 மட்டுமே கைப்பற்றினர்.

Categories

Tech |