Categories
ஆட்டோ மொபைல் பல்சுவை

கான்செப்ட் காரின் வரைபடம் வெளியீடு….. வாங்க தயாராகும் வாடிக்கையாளர் …!!

Image result for kia motors india

டீசரை பொருத்தவரை இந்த கார் மிக கம்பீர தோற்றம் கொண்டிருக்கும் என தெரிகிறது.இந்த  காரின் முன்புறம் டிகோர் மாடலில் உள்ளதை போன்ற நோஸ் கிரில் தடிமனான க்ரோம் / சில்வர் பார்டெர்கள், மெல்லிய ஹெட்லேம்ப்கள், LED டேடைம் லேம்ப்களை வடிவமைக்கப்படுள்ளது  . இந்த  கார்ரின்  முன்புறம் கம்பிரமான பம்பர் பொறுத்தப்படுள்ளது . இடது மற்றும் வலது புறம் ஃபிளேர்டு வீல் ஆர்ச்கள், சில்வர் ரூஃப் ரெயில்கள், மெல்லிய ORVMகள்,  டைமண்ட் கட் அலாய் வீல்கள் கொடுக்கப்படுள்ளது . பின்புறம் LED டெயில் லேம்ப்கள் லைட் ஸ்ட்ரிப் மூலம் பொறுத்தப்பட்டுள்ளன.

இந்த ஆண்டு இறுதியில் கியா நிறுவனம் காம்பெக்ட் SUV காரை வெளியிடப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. எஸ்.யு.வி.யின் ப்ரோடோடைப் மாடல் சோதனை செய்யப்படும் விடியோவை ஒன்று   இணையத்தில் வெளியாகியுள்ளது  . புதிய SUV   காரில் UVO கனெக்ட்டெட் கார் தொழில்நுட்பம் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது .

Categories

Tech |