Categories
மாநில செய்திகள்

“கான்வாயை நிறுத்துங்க”… பதறி போன முதல்வர் ஸ்டாலின்…? இணையத்தில் வைரலாகும் வீடியோ…!!!!

முதல்வர் ஸ்டாலின் தலைமை செயலகத்தில் இருந்து அண்ணா சாலை வழியாக முகாம் அலுவலகம் நோக்கி சென்று கொண்டிருந்தபோது அண்ணா சாலை ஏஜி டி எம் எஸ் மெட்ரோ ரயில் நிலையம் அருகே இருசக்கர வாகனத்தில் வந்த நபர் ஒருவர் சாலையில் எதிர்பாராத விதமாக தடுமாறி விழுந்துள்ளார். இதனால் அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது இதை பார்த்த முதல்வர் ஸ்டாலின் உடனடியாக தனது கான்வாய் வாகனத்தை நிறுத்தி இருக்கிறார். வாகனத்தில் இருந்து இறங்கி காயமடைந்தவரை உடனடியாக அங்கிருந்த ஆட்டோவில் ஏற்றி சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளார்.

இதனையடுத்து காயமடைந்தவர் ஜூலை மேடு பகுதியை சேர்ந்த அருள்ராஜ் என்பது தெரியவந்துள்ளது. இந்த சூழலில் இந்த சம்பவம் நடைபெற்ற போது அங்கிருந்த சிலர் தங்களது செல்போனில் வீடியோ எடுத்திருக்கின்றனர். முதல்வர் ஸ்டாலின் உடன் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடியும் சம்பவ இடத்தில் இருந்துள்ளார். முதல்வர் ஸ்டாலின் சாலையில் இறங்கியதை தொடர்ந்து பொதுமக்கள் அங்கு குவிய தொடங்கிவிட்டனர் இதனை தொடர்ந்து அங்கிருந்து காவலர்களும் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றுள்ளனர்.

Categories

Tech |