காலையில் எழுந்தவுடன் நம்மில் பலருக்கு பிடித்தது காபி. காபியை உட்கொண்டால் எடை குறையுமா, அதிகரிக்குமா என்ற சந்தேகம் நம்மில் பலருக்கும் உண்டு. அவற்றில் எது சரி என்பதை இதில் காண்போம்.
காப்பி உடல் மற்றும் மனதை புத்துணர்ச்சியுடன் வைக்கும் ஒரு பானம். உடல் எடையை குறைப்பவர்கள் பலர் காப்பியை அதிகமாக எடுத்துக் கொள்கிறார்கள். எடை குறைக்க டயட் நிபுணர்கள் இந்த காபியை பரிந்துரை செய்கிறார்கள். ஆனால் காபியில் வெண்ணை அல்லது சிறிது நெய் சேர்த்துக் கொடுப்பதால் என்னென்ன மாற்றங்கள் நம் உடலில் ஏற்படும் என்பதை பார்க்கலாம்.
புத்துணர்வு அளிக்கும் காப்பி
தூக்கத்திலிருந்து உங்களை எழுப்பும் போது, உங்கள் காலையை இனிதாக தொடங்க, மந்தமான நாட்களுக்குப்பிறகு உங்கள் உடலை மீண்டும் புத்துணர்ச்சி அடைய செய்ய , மோசமான தலைவலியில் இருந்து விடுதலை ஆக காப்பியை சிலர் விரும்பி சாப்பிடுவர். ஒட்டுமொத்தமாக காப்பியை தவிர்ப்பது என்பது சற்று கடினமாக இருக்கும். நீங்கள் அந்த காபியை ஆரோக்கியமாக எப்படி மாற்றுவது என்பதை பார்க்க வேண்டும்.
அதற்கு ஒரு டீஸ்பூன் நெய் சேர்த்தால் போதும். காப்பி அல்லது புல்லட் காப்பி என்பது நிறைய பிரபலங்கள் மற்றும் உணவு ஊட்டச்சத்து நிபுணர்கள் பின்பற்றிவரும் ஒரு ஸ்டைல். டயட் என்பதை விட இது மிகவும் ஆரோக்கியம். நெய் மற்றும் காபியை ஒன்றாக கலப்பதால் நம் உடம்பிற்கு ஆரோக்கியத்தை தருகிறது.
அதற்கான நான்கு நன்மைகளை காணலாம்
குடலுக்கு நல்லது:
சிலருக்கு செரிமான அமைப்பில் காப்பி சற்று கடுமையான மற்றும் வயிற்று சம்பந்தமான தொந்தரவுகளை ஏற்படுத்தும். மக்கள் வெறும் வயிற்றில் காபி குடிப்பதை தவிர்ப்பது, காபியில் சிறிது நெய் சேர்த்தால் இந்த பிரச்சனைகள் வராது. நெய் உள்ள அமிலத்தன்மை, குடலில் ஏற்படும் வீக்கம், அதில் உள்ள கால்சியம் ஆகியவற்றால் இந்த வலிகளில் இருந்து நிவாரணம் தருகின்றது. இது உங்கள் உடல் ஆரோக்கியத்திற்கு வளர்ச்சியை ஏற்படுத்துகின்றது.
உடல் எடையை குறைக்க:
உடல் எடையை குறைக்கும் போது கொழுப்புகளை முற்றிலும் தவிர்க்க வேண்டும் என்று அறிவுறுத்த படவில்லை. உணவு திட்டத்தில் சிறந்த கொழுப்புகளை தேர்வு செய்து உண்ண வேண்டும். நெய் உங்கள் எடையை திறம்பட குறைக்கும். நெய்யில் உள்ள சத்தான கொழுப்பை சேர்க்க, உங்கள் உடலில் காப்பியின் நன்மைகள் இரட்டிப்பாகிறது. ஒரு டம்ளர் காபி உங்கள் வயிற்றை நிரப்ப போவதில்லை. அது பசி ஹார்மோனை உற்பத்தி செய்கிறது. செரிமான செயல்முறையை ஏதுவாகிறது. உணவு குறைவாக சாப்பிட இது உதவுகிறது. இதில் சிறிது நெய் மற்றும் வெண்ணெய் சேர்த்து சாப்பிட்டால் உங்கள் உடல் எடையை குறைய இது சிறந்த வழியாக இருக்கும்.
காலை உணவுக்கு மாறாக
ஒருவேளை நீங்கள் காப்பி காலை உணவாக சாப்பிடுகிறீர்கள் என்றால், அதில் சிறிது பட்டர் சேர்த்து சாப்பிடுவது மிகவும் சிறந்தது. காலையில் எழுந்ததும் காப்பியை சாப்பிடுவதால் உங்களது உடலில் சில கலோரிகளை ஏற்படுத்தும் கொழுப்பிலிருந்து ஆற்றல் உற்பத்தி செய்யப்படுவதால் வழக்கமான காலை உணவு நேரத்தின்போது பசி மற்றும் ரத்த சர்க்கரை அளவைக் குறைத்து அரிய மருந்தாக பயன்படுகிறது.
கோபத்தை குறைக்க:
ஒரு கப் காபி உங்கள் கோபத்தை தலைகீழாக மாற்றுவதோடு, நன்மைகளை பெற நெய்யை உட் கொள்ளுங்கள். மூளைக்கு செல்கின்ற நரம்புகளை இணைகின்றது. உடலில் ஹார்மோன் உற்பத்தியை மேம்படுத்துகிறது. மனநிலையையும் நிலையானதாக வைத்திருக்கின்றது, சில சந்தர்ப்பங்களில் காபி குடிப்பது பாதிப்பில்லை என்றாலும் வழக்கமாக எடுத்துக் கொள்வது ஒரு சில பாதிப்புகளை ஏற்படுத்தும். அதிலிருந்து விலக வெண்ணெய் கலந்த காப்பியை உட்கொள்ளுங்கள்.