Categories
சினிமா தமிழ் சினிமா

காபி வித் காதல் திரைப்படம்… பிரபல இயக்குனருடன் இணைந்த உதயநிதி…!!!!!!

அரண்மனை 3 படத்தின் வெற்றியை தொடர்ந்து சுந்தர் சி இயக்கத்தில் மூன்று நாயகர்கள் மற்றும் மூன்று நாயகிகள் நடிக்கும் திரைப்படம் காபி வித் காதல். இந்த படத்தில் ஜீவா, ஜெய், ஸ்ரீகாந்த், மாளவிகா சர்மா, அம்ரிதா ஐயர், ரைசா வில்சன் மற்றும் ஐஸ்வர்யா தத்தா போன்ற பல முக்கிய முன்னணி நடிகர்கள் நடித்திருக்கின்றனர். இவர்களுடன் யோகி பாபு, ரெடின் கிங்ஸ்லீ, பிரதாப் போத்தன், விச்சு விசுவநாத், சம்யுக்தா சண்முகம், திவ்யதர்ஷினி, அருணா பால்ராஜ், பேபி விர்த்தி போன்றோர் நடித்தனர். யுவன் சங்கர் ராஜா இசையமைத்திற்கும் இந்த படத்தை குஷ்புவின் அக்னி சினிமா பிரைவேட் லிமிடெட் மற்றும் பென்ஸ் மீடியா நிறுவனங்கள் இணைந்து தயாரித்திருக்கின்றது.

மேலும் சமீபத்தில் இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக்  போஸ்டர் மற்றும் பாடல்கள் வெளியாகி இணையதளத்தில் வைரலானது. இந்த நிலையில் இந்த படத்தின் புதிய அப்டேட்டை பட குழு வெளியிட்டுள்ளது. அதன்படி இந்த படத்தில் உதயநிதி ஸ்டாலின் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் இணைந்திருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த படம் வருகின்ற அக்டோபர் 7ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

Categories

Tech |