Categories
சினிமா தமிழ் சினிமா

“காபி வித் காதல்” திரைப்படம்…. தியாகி பாய்ஸ் பாடலின் வீடியோ வெளியீடு…. வைரல்….!!!!

டிரைக்டர் சுந்தர் சி இயக்கத்தில் 3 நாயகர்கள் மற்றும் 3 நாயகிகள் நடிக்கக்கூடிய திரைப்படம் காபி வித் காதல். இந்த படத்தில் ஜீவா, ஜெய், ஸ்ரீகாந்த், மாளவிகா சர்மா, அம்ரிதா ஐயர், ரைசா வில்சன் மற்றும் ஐஸ்வர்யா தத்தா உட்பட பல்வேறு முன்னணி நடிகர்கள் நடித்து இருக்கின்றனர். இவர்களுடன் யோகிபாபு, ரெடின் கிங்ஸ்லி, பிரதாப் போத்தன், விச்சுவிஸ்வநாத், சம்யுக்தா ஷண்முகம், திவ்யதர்ஷினி(டிடி), அருணா பால்ராஜ், பேபி விர்த்தி போன்றோர் நடித்து உள்ளனர்.

யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ள இந்த படத்தை குஷ்புவின் அவ்னி சினிமேக்ஸ் பிரைவேட் லிமிடெட் மற்றும் பென்ஸ் மீடியா நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளது. இத்திரைப்படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி சமூகவலைதளத்தில் ட்ரெண்டகியது. இந்த நிலையில் காபி வித் காதல் படத்தின் “தியாகி பாய்ஸ்” பாடலின் வீடியோ வெளியாகி இருக்கிறது. பேரரசு வரிகளில் யுவன் சங்கர்ராஜா மற்றும் ஹிப்ஹாப் தமிழா பாடியுள்ள இப்பாடல் சமூகவலைதளத்தில் கவனம் ஈர்த்து வருகிறது. காபி வித் காதல் படம் நவம்பர் 4ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |