Categories
சினிமா

“காபி வித் காதல்” படம்…. வெளியான ரம் பம் பம் பாடல்…. குஷியில் துள்ளி குதிக்கும் ரசிகர்கள்…..!!!!!

அரண்மனை 3 திரைப்படத்தின் வெற்றியைத் அடுத்து சுந்தர்.சி இயக்கத்தில் 3 நாயகர்களும், 3 நாயகிகளும் நடிக்கும் படம் காபி வித் காதல் ஆகும். இந்த படத்தில் ஜீவா, ஜெய், ஸ்ரீகாந்த், மாளவிகா சர்மா, அம்ரிதா ஐயர், ரைசா வில்சன் மற்றும் ஐஸ்வர்யா தத்தா உட்பட பல முன்னணி நடிகர்கள் நடித்து இருக்கின்றனர். இவர்களுடன் யோகி பாபு, ரெடின் கிங்ஸ்லி, பிரதாப் போத்தன், விச்சு விஸ்வநாத், சம்யுக்தா ஷண்முகம், திவ்யதர்ஷினி (டிடி), அருணா பால்ராஜ், பேபிவிர்த்தி போன்றோர் நடித்து இருக்கின்றனர்.

யுவன்சங்கர் ராஜா இசைஅமைத்திருக்கும் இந்த படத்தை குஷ்புவின் அவ்னிசினி மேக்ஸ் பிரைவேட் லிமிடெட் மற்றும் பென்ஸ் மீடியா நிறுவனங்கள் இணைந்து தயாரித்து உள்ளது. அண்மையில் இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி இணையத்தில் வைரலாகியது. அதனை தொடர்ந்து இப்படத்தில் இருந்து ரம் பம் பம் பாடல் நேற்று (ஜூன் 1) மாலை 6 மணிக்கு வெளியாகும் என படக்குழு ப்ரோமோ வீடியோ ஒன்றை வெளியிட்டு அறிவித்தது. இந்த நிலையில் இத்திரைப்படத்தின் ரம் பம் பம் பாடல் சமூகவலைதளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. இப்பாடல் மைக்கேல் மதன காமராஜன் படத்துக்காக இளையராஜா இசையமைத்த பாடல் என்பது கவனிக்கத்தக்கது.

https://youtu.be/g_kQJHtmZuM

Categories

Tech |