Categories
உலக செய்திகள்

காபூல் குண்டுவெடிப்பில் 2 பேர் மரணம்…. தொடர்ந்து நடைபெறும் துப்பாக்கிச்சூடு…. வெளியான அதிர்ச்சி தகவல்கள்….!!!

குண்டுவெடிப்பில் 2 பேர் உயிரிழந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

ஆப்கானிஸ்தானில் உள்ள காபூலில் இருக்கும் கர்தே பர்வான் என்ற பகுதியில் புனித குருத்வாரா அமைந்துள்ளது. இந்த பகுதியில் தொடர்ந்து 2 குண்டு வெடிப்புகள் நடந்துள்ளது. இந்த குண்டுவெடிப்பில் 2 பேர் உயிரிழந்ததாக தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த பகுதியில் பலர் மாட்டிக்கொண்டுள்ளனர். இந்நிலையில் தலிபான் பாதுகாப்பு படையினருக்கும், தீவிரவாதிகளுக்கும் இடையே துப்பாக்கிச்சூடு நடந்து வருகிறது. இந்த தாக்குதலின் போது 25 முதல் 30 பேர் குருத்வாராவில் இருந்ததாக தகவல்கள் கிடைத்துள்ளது. இதில் பலர் குருத்வாராவில் இருந்து வெளியேறி உள்ளதாகவும், சிலர் மாட்டிக் கொண்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

இருப்பினும் மாட்டிக்கொண்ட நபர்களின் எண்ணிக்கை குறித்த முழு விவரமும் கிடைக்கவில்லை. இந்நிலையில் பா.ஜ.க தலைவர் மன்ஜீந்தர் சிங் சிர்சா துப்பாக்கிச்சூடு தொடர்ந்து நடந்து வருவதாக கூறியுள்ளார். இதனையடுத்து குண்டுவெடிப்பில் உயிரிழந்த நபரில் ஒருவர் சீக்கியர் என்றும், மற்றொருவர் ஆப்கானிஸ்தான் நாட்டை சேர்ந்த பாதுகாவலர் அகமது என்பதும் தெரியவந்துள்ளது. மேலும் மத்திய வெளிவிவகார அமைச்சகம் குண்டுவெடிப்பிற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள நிலையில், நிலமையை தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும் கூறியுள்ளது.

Categories

Tech |