ஆப்கானிஸ்தானில் காபூல் விமான நிலையத்தில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் 2 பேர் உயிரிழந்துள்ளனர். காபூர் விமான நிலையத்தில் இருந்து புறப்படும் அனைத்து விமானங்களும் ரத்து செய்யப்பட்டுள்ளன. காபூல் வான்வெளி மூடப்பட்டதால் இந்தியாவில் இருந்து சற்று நேரத்தில் புறப்பட இருந்த விமானம் ரத்து செய்யப்பட்டது. இதனால் ஆப்கானிஸ்தானில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் ஆப்கானிஸ்தானில் சிக்கியுள்ள 200க்கும் மேற்பட்ட சீக்கியர்களையும், அங்குள்ள அனைத்து இந்தியர்களையும் பத்திரமாக மீட்கக்கோரி மத்திய வெளியுறவுத்துறை அமைச்சருக்கு பஞ்சாப் முதல்வர் அமரீந்தர் சிங் வேண்டுகோள் விடுத்துள்ளார்.