Categories
தேனி மாவட்ட செய்திகள்

காப்பகத்தில் இருந்த பெண்… கணவரால் ஏற்பட்ட விபரீதம்… போலீஸ் நடவடிக்கை…!!

குடும்ப தகராறு காரணமாக காப்பகத்தில் இருந்த பெண்ணை அரிவாளால் வெட்டிய கணவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

கள்ளகுறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை பகுதியில் உள்ள பு.கிள்ளனூரில் துரைபாண்டியன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கடந்த 5 ஆண்டுகள் முன்பு உமா மகேஸ்வரி என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்ட நிலையில் தற்போது இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு கணவருடன் ஏற்பட்ட தகராறு காரணமாக மகேஸ்வரி கோபித்துகொண்டு தேனி மாவட்டத்தில் உள்ள தனது உறவினர் வீட்டிற்கு குழந்தைகளை அழைத்துக்கொண்டு சென்றுள்ளார்.

இதனையடுத்து கடந்த மாதம் துரைப்பாண்டியன் தேனிக்கு சென்று மகேஸ்வரியிடம் தகராறு செய்துள்ளார். இதனால் மகேஷ்வரி மாவட்ட சமூக நலத்துறை அலுவலகத்தில் புகார் அளித்துள்ளனர். அந்த புகாரின் அடிப்படையில் அதிகாரிகள் விசாரணை நடத்தி உமா மகேஸ்வரியை கடந்த மாதம் 13ஆம் தேதி தேனி கொடுவிலார்பட்டியில் உள்ள ஒரு காப்பகத்தில் தற்காலிகமாக தங்க வைத்திருந்துள்ளனர். இதற்குப்பின்னர் கடந்த மாதம் 29ஆம் தேதி அந்த காப்பகத்திற்கு துரைபாண்டியன் சென்று மனைவியுடன் சேர்ந்து வாழ்வதாக கூறி உமா மகேஸ்வரியை அழைத்து சென்றுள்ளார்.

மேலும் மனைவியை அழைத்து சென்ற துரைப்பாண்டியன் மீண்டும் மகேஸ்வரியை கொடுமை படுத்தியுள்ளார். இதனால் அச்சமடைந்த மகேஸ்வரி பாதுகாப்பு கேட்டு ஆண்டிபட்டி அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்நிலையில் காவல்துறையினர் மீண்டும் உமா மகேஸ்வரி மற்றும் அவரது 2 குழந்தைகளையும் கடந்த 8ஆம் தேதி கொடுவிலார்பட்டியில் உள்ள அதே காப்பகத்திற்கு அனுப்பி வைத்துள்ளனர். இதனையடுத்து 2 தினங்களுக்கு முன்பு துரைபாண்டியன் காப்பகத்தில் சுவர் ஏறி குதித்து உள்ளே சென்று உமா மகேஸ்வரியை அடித்து அரிவாளால் வெட்டியுள்ளார்.

இதனை பார்த்த அங்கிருந்தவர்கள் துறைபாண்டியனை பிடிக்க முயன்றபோது அரிவாளை காட்டி மிரட்டி அங்கிருந்து தப்பியோடியுள்ளார். இதனைதொடர்ந்து பலத்த காயமடைந்த மகேஸ்வரியை காப்பகத்தில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளார். தற்போது மகேஸ்வரிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது. இச்சம்பம் குறித்து காப்பகத்தை நடத்தி வரும் தீனதயாளன் பழனிசெட்டிபட்டி காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் அடிப்பகையில் காவல்துறையினர் வழக்குபதிவு செய்து துரைபாண்டியனை கைது செய்துள்ளனர்.

Categories

Tech |