கேரள மாநிலம் எர்ணாகுளம் பகுதியை சேர்ந்த பங்கஜ் காசன் நீலம்முரி என்பவரின் மனைவி உஷா. இவர் தேனி மாவட்டம் கம்பம் பகுதியில் உள்ள தோட்டங்களில் முந்திரி சாகுபடி குறித்து பார்வையிட முடிவு செய்து நேற்று 15 பேருடன் வேனில் தேனீக்கு வந்து கொண்டிருந்தார். அப்போது போடிமெட்டு மலைப்பாதையில் 3 மற்றும் 4-வது கொண்டை ஊசி வளைவுக்கு இடையே வேன் வந்து கொண்டிருந்தபோது திடீரென கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடியது.
இந்நிலையில் வேனில் இருந்த அனைவரும் காப்பாற்றுங்கள் என அபாய குரல் எழுப்பியுள்ளனர். இதனையடுத்து வேன் சாலையோர தடுப்பு சுவரில் மோதி நின்றது. இந்த விபத்தில் வேனின் முன் பகுதியில் உள்ள இரண்டு சக்கரங்கள் தடுப்பு சுவரில் இருந்து உடைந்த கற்களில் சிக்கி அந்தரத்தில் தொங்கி உள்ளது. இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் அவர்களை மீட்டனர். அதன் பின் விபத்தில் காயம் அடைந்தவர்களை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இந்த சம்பவம் போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.