Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

“காப்பாத்துங்க” மாடியில் தொங்கிய சிறுவன்…. வியாபாரி செய்த செயல்…. குவியும் பாராட்டு…!!

மாடியின் கைப்பிடியைப் பிடித்து தொங்கிக் கொண்டிருந்த சிறுவனை காப்பாற்றிய வியாபாரிக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது

திருச்சி மாவட்டத்தில் உள்ள இளம்குறிச்சியை சேர்ந்தவர் முகமது சாதிக். இவர் கிராமப்புறங்களில் ஓம வாட்டர், பிளீச்சிங் பவுடர், பினாயில் போன்ற பொருட்களை விற்பனை செய்யும் தொழிலை செய்து வருகின்றார். கடந்த செவ்வாய்க்கிழமை தனது இரண்டு சக்கர வாகனத்தில் பழையகோட்டை, வீரப்பூர் சந்தைப்பேட்டை வழியாக தோப்புபட்டி சாலையில் வந்து கொண்டிருந்தார். அப்போது குறிப்பிட்ட ஒரு வீட்டின் மாடியில் இருந்து காப்பாற்றுங்கள் என்று சிறுவனின் அழுகுரல் கேட்டு உள்ளது.

இதனால் அதிர்ச்சி அடைந்த முகமது சாதிக் உடனடியாக வண்டியை நிறுத்திவிட்டு சத்தம் கேட்ட திசையை நோக்கி சென்று பார்த்தார். அங்கு வீட்டு மாடியின் கைப்பிடி சுவற்றை பிடித்துக்கொண்டு ஆறு வயது மதிக்கத்தக்க சிறுவன் தொங்கிக் கொண்டிருந்தான். மாடியில் நின்று சிறுவனின் சகோதரி  சிறுவனை பிடித்து இருந்தாலும் மேலே அவனை தூக்க முடியவில்லை. இதனை பார்த்த முகமத் சாதிக் உடனடியாக சிறுவன் தொங்கிக்கொண்டிருந்த இடத்தின் கீழே சென்று நின்றார்.

அதன்பிறகு சிறுமியிடம் சிறுவனின் கையை  விடுமாறு கூறினார். சிறுமியும் உடனடியாக கைவிட சிறுவனை முகமத் சாதிக் லாவகமாக பிடித்து காப்பாற்றினார். இதனை அங்கிருந்தவர்கள் காணொளியாக பதிவு செய்தனர். தற்போது இது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. தக்க சமயத்தில் சிறுவனை காப்பாற்றிய வியாபாரிக்கு பலரும் தங்கள் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர். பெற்றோர் வேலைக்கு சென்றிருந்த சமயம் வீட்டில் சிறுவர்கள் தனியாக இருந்த போதே இது நடந்ததாக கூறப்படுகிறது.

Categories

Tech |