துபாய் அரசர் தன் மகளை தனியறையில் அடைத்து கொடுமைப்படுத்துகிறார் என்று அவரின் சகோதரி காவல்துறையினருக்கு ரகசிய கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.
துபாய் அரசர் சேக் முகம்மது தன் 38 வயது மகள் சம்ஷாவை அவரின் விருப்பத்திற்கு எதிராக ஒரு அறையில் அடைத்து வைத்து கொடுமைப்படுத்துகிறார் என்று அவரின் தங்கையான இளவரசி லத்தீபா(34) கூறியுள்ளார். பிரிட்டனில் இருக்கும் சேக் முகம்மதுவின் ஒரு எஸ்டேட்டிலிருந்து அவரின் மகனான சம்ஷா ஒருநாள் தப்பியோடியுள்ளார்.
அதன்பின்பு அவரைத் தேடிப் பிடித்து அவருக்கு மயக்க மருந்து கொடுத்து துபாய்க்கு கொண்டு சென்று சேக் முகம்மது தனி அறையில் அடைத்து வைத்துள்ளார். இதுகுறித்து காவல்துறையினருக்கு சம்ஷாவின் தங்கை இளவரசி லத்தீபா கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில் என் சகோதரிக்கு வாழ்க்கையில் சுதந்திரமே கிடைக்கவில்லை. அதனால் தான் அவர் தப்பி ஓடினார் என்று குறிப்பிட்டிருக்கிறார்.
ஆனால் அவரைப்பிடித்து அடிமையாக்கி என் குடும்பத்தினர் அடித்து உதைத்தனர். மேலும் என் தந்தை சம்ஷாவை திரும்பத் திரும்ப முகத்தில் குத்தியும் தலையில் அடித்தும் காயப்படுத்துகிறார். இதனை நான் என் கண்ணால் பார்த்தேன். மேலும் என்னால் முடிந்த முயற்சிகளை செய்து அவரை காப்பாற்ற நினைத்தேன். எனினும் அவரை என்னால் காப்பாற்ற முடியவில்லை.
மேலும் 21 வருடங்களுக்கு முன்பு காணாமல் போன அவர் தற்போது எவ்வாறு இருக்கிறார் என்று எவருக்கும் தெரியாது. எனவே அவரின் வழக்கில் கவனம் செலுத்தி அவருக்கு விடுதலை கிடைக்க உதவுங்கள் என்று எழுதியிருக்கிறார். மேலும் லத்தீபாவையும் அவரின் தந்தை கடத்தி தனி சிறையில் தான் அடைத்துவைத்துள்ளார். எனினும் ரகசியமாக எப்படியோ கஷ்டப்பட்டு காவல்துறையினருக்கு அவர் கடிதம் அனுப்பியிருக்கிறார்.