Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

“காப்பாளராக சான்றிதழ் வழங்க வேண்டும்” பெற்றோரை இழந்த குழந்தைகளுக்காக போராடும் மூதாட்டி….!!!

ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள காமன்கோட்டையில் கண்ணம்மாள்(68) என்பவர் வசித்து வருகிறார். இந்த மூதாட்டி தனது மகன் வழி பேத்தி மற்றும் பேரனுடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு சென்று மனு அளித்துள்ளார். அந்த மனுவில் கூறியிருப்பதாவது, கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு எனது மகன் தர்மலிங்கம் டெங்கு காய்ச்சல் காரணமாக இருந்துவிட்டார். கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு எனது மருமகள் நான்கு குழந்தைகளில் ஒரு குழந்தையை மட்டும் தூக்கிக் கொண்டு எங்கோ சென்று விட்டார். இதனால் கார்த்திகா(8), லாவண்யா(13), ஜெகதீஷ் குரு(11) ஆகிய மூன்று பேரையும் நான் பராமரித்து வருகிறேன்.

இந்நிலையில் 100 நாள் வேலைக்கு சென்று அதில் கிடைக்கும் வருவாயை பயன்படுத்தி பிள்ளைகளை வளர்த்து வருவதால் பள்ளியில் உதவி தொகை பெற வங்கியில் கணக்கு தொடங்க வேண்டும். பெற்றோரை இழந்த இந்த குழந்தைகளுக்கு நான்தான் காப்பாளர் என்று சான்றிதழ் வழங்கினால்தான் வங்கி கணக்கு தொடங்கு முடியும் என கூறிவிட்டனர். எங்களது நிலைமையை கருத்தில் கொண்டு பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு அரசு மாதாந்திர உதவித் தொகை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மூதாட்டி மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

Categories

Tech |