இந்திய அணி தனது அசத்தலான ஆட்டத்தின் மூலம் ஆஸ்திரேலியா மைதானத்தில் தனது முதல் வெற்றியை பதிவு செய்துள்ளது.
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரை வென்று வரலாற்று சாதனை படைத்தது இந்திய அணி. பிரிஸ்பேன் கப்பா மைதானத்தில் நடைபெற்ற 4 வது டெஸ்டில் இந்தியா அபார வெற்றி பெற்றது. 328 ரன்கள் இலக்கை துரத்திய இந்திய பேட்ஸ்மேன்கள் ஆஸ்திரேலியாவின் பந்து வீச்சாளர்களை சிதற அடித்து 7 விக்கெட்டுகள் இழந்து 329 ரன்கள் குவித்து 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளனர்.
மேலும் தனது அசத்தலான ஆட்டத்தின் மூலம் ஆஸ்திரேலியாவின் கப்பா மைதானத்தில் தனது முதல் வெற்றியை இந்திய அணி பதிவு செய்துள்ளது. ஆத்திரேலியா 1988 க்கு பிறகு இந்த மைதானத்தில் முதல் தோல்வியைச் சந்தித்துள்ளது. முக்கிய வீரர்கள் இல்லாத நேரத்தில் சிறப்பாகச் செயல்பட்டு வரலாற்று சாதனை படைத்த இந்திய வீரர்களுக்கு உலகம் முழுவதிலும் இருந்து பாராட்டுகள் குவிந்த வண்ணம் உள்ளது.