Categories
தேசிய செய்திகள்

காப்பீடு பற்றி EPFO பயனாளர்களுக்கு….. வெளியான மிக முக்கிய தகவல்…..!!!!!

ஊழியர்களின் வருங்கால வைப்புநிதி கணக்கு வைத்திருப்போர், ஊழியர்களின் டெபாசிட்டுடன் இணைக்கப்பட்ட காப்பீடு திட்டத்தின் கீழ் உறுதிசெய்யப்பட்ட பலனைப் பெறுவதற்கு தகுதியுடையவர் ஆவார். இதற்கிடையில் ஒருவர் இறந்து விட்டாலும், அவரது பங்களிப்பு ஹோல்டிங் அக்கவுண்ட்டில் வருவது நின்று விடும். உறுதி செய்யப்பட்ட பலனைப் பெறுவதற்கு நிபந்தனைகளைப் பூர்த்திசெய்ய வேண்டும். இபிஎப்ஓ அறிவிப்புப்படி, ஒரு ஊழியர் பணியில் இருக்கும்போது இறந்து விட்டால், சில அலுவலகங்கள் முந்தைய சில தினங்களில் பங்களிப்பு பெறப்படவில்லை என்ற அடிப்படையில் கோரிக்கைகளை நிராகரிக்கிறது. எனினும் வருங்கால வைப்புநிதி அமைப்பு இதுபோன்ற சந்தர்ப்பங்களில் உரிய சரிபார்ப்பினை மேற்கொள்ள வேண்டும்.

அந்த சரிபார்ப்பு 7 நாட்களுக்குள் செய்யப்பட வேண்டும் எனவும் அதற்காக குடும்ப உறுப்பினர்களை துன்புறுத்தக் கூடாது எனவும் கூறியுள்ளது. ஊழியர்களின் டெபாசிட்டுடன் இணைக்கப்பட்ட காப்பீட்டுத்திட்டம் (இடிஎல்ஐ) என்பது ஊழியர்களின் வருங்கால வைப்புநிதி (இபிஎஃப்) திட்டத்தின் அனைத்து சந்தாதாரர்களுக்கும் வழங்கப்படும் கட்டாயக் காப்பீட்டுத் திட்டம் ஆகும். அந்த வகையில் பாலிசிதாரர் இறந்து விட்டால் அவரது நாமினி மொத்தத்தொகையைப் பெறுவார். அந்த தொகை இறந்தவரின் வேலையின் கடைசி 12 மாதங்களில் பெறப்பட்ட சம்பளத்தைப் பொறுத்தது ஆகும். இதில் ஒன்றுக்கு அதிகமான நாமினிகளை பரிந்துரைக்கும் வசதியும் வழங்கப்படுகிறது. உறுப்பினர்களின் யூஏஎன் எண் மற்றும் ஆதார் விபரங்களை இபிஎப் கணக்கில் சேர்க்கவேண்டும். இதை ஆன்லைனில் செய்ய பின்வரும் படிநிலைகளை கடைபிடிக்கலாம்.

# இபிஎப்ஓ-ன் அதிகாரபூர்வமான ​​இணையதளத்திற்குச் சென்று “சேவைகள்” என்பதற்குச் செல்ல வேண்டும்.

# தற்போது ஊழியர்கள் பகுதிக்கு சென்று உறுப்பினர் யூஏஎன்/ஆன்லைன் சேவை என்பதைக் கிளிக் செய்ய வேண்டும்.

# யுனிவர்சல் கணக்குஎண் (யூஏஎன்) மற்றும் பாஸ்வேர்டை போட்டு லாக்இன் செய்யவும்.

# தற்போது “மேனேஜ் டேப்” என்பதன் கீழ் இ-நாமினேஷனைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.

# குடும்ப அறிவிப்பை புதுப்பிக்க “ஆம்” என்பதைக் கிளிக்செய்யவும்.

# குடும்ப விபரங்களை “சேர்” என்பதனைக் கிளிக் செய்ய வேண்டும்.

# இவற்றில் நீங்கள் ஒன்றுக்கும் அதிகமான நாமினிகளைச் சேர்த்துகொள்ளலாம்.

# அடுத்து “நாமினேஷன் விவரங்கள்” என்பதைக் கிளிக்செய்து, இதில் இபிஎஃப் நாமினேஷனை சேமி என்பதைக் கிளிக் செய்யவேண்டும்.

# இ-சைன் என்பதைக் கிளிக் செய்ததும் ஆதாருடன் இணைக்கப்பட்ட மொபைல் எண்ணுக்கு ஓடிபி அனுப்பப்படும். இதன் வாயிலாக இ-நாமினேஷன் செய்யப்படுகிறது.

Categories

Tech |