பயிர் காப்பீட்டு தொகை வழங்க நடவடிக்கை எடுக்கக்கோரி விவசாயிகள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றுள்ளது.
நாமக்கல் மாவட்டம் திருவாடனை தாலுகா அலுவலகம் முன்பு தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றுள்ளது. இந்த ஆர்பாட்டத்தில் 2019-20 ஆம் ஆண்டிக்கான பயிர் காப்பீட்டு 25% மட்டுமே வழங்கப்பட்டுள்ளது. எனவே அதனை மறு பரிசீலனை செய்து 100% இழப்பீடு வழங்க வேண்டும்.
இதனையடுத்து 2020-21 ஆண்டு மழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு பயிர் காப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும், தொடர் கனமழையால் பாதிப்படைந்த பயிர்களை வேளாண்மைத் துறை அதிகாரிகள் ஆய்வு செய்து ஏக்கருக்கு 30,000 ரூபாய் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தியுள்ளனர்.
இந்த ஆர்பாட்டத்திற்கு தாலுகா தலைவர் செந்தில்குமார் தலைமை தாங்கியுள்ளார். மேலும் தாலுகா துணை தலைவர் போஸ், செயலாளர்கள் சோனைமுத்து, சந்தனம், சகாதேவன், மாவட்ட தலைவர் சேதுராமு, சங்கத்தின் மாநில துணைத்தலைவர் முத்துராமு, மாவட்ட செயலாளர் மயில்வாகனன் உள்பட சங்க நிர்வாகிகள் பலரும் பங்கேற்றுள்ளனர்.