இங்கிலாந்து நாட்டில் உள்ள பர்மிங்காம் நகரில் காமன்வெல்த் போட்டிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்த போட்டியில் இந்தியா 19 வெண்கல பதக்கங்கள், 12 வெள்ளி பதக்கங்கள், 16 தங்கப்பதக்கங்கள் என மொத்தம் 47 பதக்கங்களை வென்றுள்ளது. இதனால் பதக்க பட்டியலில் 5-வது இடத்தில் இந்தியா இருக்கிறது. இன்று பெண்களுக்கான 60 மீட்டர் தூரம் ஈட்டி எறிதல் போட்டி நடைபெற்றது.
இதில் அன்னுராணி மூன்றாவது இடத்தை பிடித்து வெண்கல பதக்கத்தை வென்றுள்ளார். இவர் ஈட்டி எறிதல் போட்டியில் பதக்கம் வென்ற முதல் இந்திய பெண்மணி என்ற பெருமையை பெற்றுள்ளார். மேலும் 10,000 மீட்டர் ஆண்களுக்கான வேக நடை போட்டி நடைபெற்றது. இதில் சந்தீப் குமார் வென்று வெண்கலப்பதக்கம் பெற்றுள்ளார்.