இங்கிலாந்து நாட்டின் பர்மிங்காம் நகரில் நடைபெறும் காமன்வெல்த் விளையாட்டு போட்டிகளில் இந்தியா தொடர்ந்து பதக்கங்களை குவித்துவருகிறது. இன்று நடந்த பெண்களுக்கான 48 கிலோ எடைப்பிரிவு குத்துச் சண்டை போட்டியில் இந்தியாவின் நீத்துகங்காஸ் தங்கப்பதக்கத்தை கைப்பற்றினார். அதேபோன்று ஆண்களுக்கான 51 கிலோ எடைப் பிரிவில் இந்தியாவின் அமித் பங்கால் தங்கம் வென்று அசத்தினார்.
இந்த நிலையில் காமன் வெல்த் மும்முறை தாண்டுதல் போட்டியில் இன்று இந்தியாவின் எல்தோஸ் பால் தங்கப்பதக்கமும், அப்துல்லா அபுபக்கர் வெள்ளிப்பதக்கமும் வென்றிருக்கின்றனர். இதன் வாயிலாக இந்தியா 16 தங்கம், 11 வெள்ளி, 18 வெண்கலம் என 45 பதக்கங்களைப் பெற்றுள்ளது.