இங்கிலாந்து நாட்டில் உள்ள பர்மிங்காம் நகரில் காமன்வெல்த் போட்டிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்த போட்டியில் இந்திய வீரர்கள் தொடர்ந்து பதக்கங்களை குவித்து வருகின்றனர். இன்று பெண்களுக்கான அரை இறுதி பேட்மிட்டன் போட்டி நடைபெற்றது. இதை இந்திய வீராங்கனை பிவி சிந்து சிங்கப்பூர் வீராங்கனையுடன் மோதினார். இதில் பிவி சிந்து 21-19, 21-17 என்ற கணக்கில் வெற்றி பெற்றுள்ளார்.
அதன் பிறகு ஆண்களுக்கான அரை இறுதி பேட்மிட்டன் தொடரில் இந்திய வீரர் லக்ஷயா சென் சிங்கப்பூர் வீரருடன் மோதினார். இதில் லக்ஷயா சென் 21-10, 18-21, 21-16 என்ற கணக்கில் வெற்றி பெற்றுள்ளார். இதன் காரணமாக பிவி சிந்து மற்றும் லக்ஷயா சென் இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளனர்.