Categories
அரசியல்

காமன்வெல்த் போட்டி…. இந்தியாவுக்கு 5-வது தங்கத்தை வென்ற மல்யுத்த வீராங்கனை….இதோ சில தகவல்கள்….!!!

இங்கிலாந்தில் உள்ள பர்மிங்காம் நகரில் காமன்வெல்த் போட்டிகள் நடைபெற்றது. இதில் இந்தியாவிற்கான 5-வது தங்கத்தை வினேஷ் போகாத் வென்றார். இவர் காமன் வெல்த் மகளிர் மல்யுத்தம் போட்டியில் 53 கிலோ எடை பிரிவில் கலந்து கொண்டார். இந்த போட்டியின் முதல் சுற்றில் கனடா வீராங்கனை சமந்தாவுடன் மோதிய வினேஷ் 5-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றார். அதன் பிறகு 2-வது சுற்றில் நைஜீரிய வீராங்கனை அடோகுரோயேவுடன் மோதிய வினேஷ் 3-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றார்.

இதனையடுத்து 3-வது மற்றும் கடைசி சுற்றில் இலங்கை வீராங்கனை மதுராவல்கேவுடன் மோதிய வினேஷ் 4-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றார். இந்த 3 சுற்றுகளிலும் வினேஷ் போகாத் வெற்றி பெற்றதால், காமன்வெல்த் மல்யுத்த போட்டியில் இந்தியாவிற்கு 5-வது தங்கப்பதக்கம் கிடைத்தது.

காமன்வெல்த் ஆடவர் மல்யுத்த போட்டியில் இந்திய வீரர் ரவிக்குமார் நைஜீரிய வீரர் வெல்சனுடன் மோதி 10-0 என்ற கணக்கில் வெற்றி பெற்று இந்தியாவிற்கு 4-வது தங்கப் பதக்கத்தை வென்று கொடுத்தார். மேலும் மகளிருக்கான 50 கிலோ எடை பிரிவில் இந்தியா சார்பில் பங்கேற்ற பூஜா கோலேத் 2 சுற்றுகளில் வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறினார்.

ஆனால் அரை இறுதி போட்டியில் பூஜா கோலேத் தோல்வியடைந்ததால், வெண்கல பதக்கத்திற்கான போட்டியில் கலந்து கொண்டார். இதில் ஸ்காட்லாந்து வீராங்கனை கிறிஸ்டினாவுடன் மோதிய பூஜா 12-2 என்ற கணக்கில் வெற்றி பெற்று வெண்கல பதக்கத்தை வென்றார்.

Categories

Tech |