Categories
அரசியல்

காமன்வெல்த் போட்டி….. எந்தெந்த நாட்களில் என்னென்ன போட்டிகள் நடைபெறும்…. முழு அட்டவணை….!!!!

காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகள் பர்மிங்காமில் வரும் ஜூலை 28ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 8-ம் தேதி வரை நடைபெற உள்ளது.  72 நாடுகளில் இருந்து 5000 விளையாட்டு வீரர்கள் பல்வேறு விளையாட்டு போட்டிகளில் கலந்து கொண்டு விளையாட உள்ளனர்.  இந்த போட்டிகளில் இந்தியாவிலிருந்து மொத்தம் 19 பிரிவுகளில் 141 போட்டிகளில் 215 விளையாட்டு வீரர்களும் வீராங்கனைகளும் பங்கேற்க உள்ளனர். இந்நிலையில் இந்த போட்டி தொடர்பாக முழு கால அட்டவணை வெளியாகி உள்ளது.

அதன்படி,

ஜூலை 28: தொடக்க விழா

ஜூலை 29 – ஆகஸ்ட் 2: கூடைப்பந்து 3*3: காமன்வெல்த்தில் முதல் முறையாக இந்த பிரிவு நடத்தப்படுகிறது.

ஜூலை 29 – ஆகஸ்ட் 3: அகுவாடிக்ஸ் – நீச்சல் மற்றும் பாரா நீச்சல்

ஜூலை 29 – ஆகஸ்ட் 8: பேட்மிண்டன்

ஜூலை 29 – ஆகஸ்ட் 4,6,7: பாக்ஸிங்

ஜூலை 29-31; ஆகஸ்ட் 2-4, 6-7: கிரிக்கெட் டி20 – முதல் முறையாக காமன்வெல்த்தில் மகளிர் கிரிக்கெட் போட்டிகள் நடத்தப்படுகின்றன. எட்ஜ்பாஸ்டனில் கிரிக்கெட் மைதானத்தில் கிரிக்கெட் போட்டிகள் நடத்தப்படுகின்றன.

ஜூலை 29 – ஆகஸ்ட் 1: சைக்கிளிங் – டிராக் மற்றும் பாரா டிராக்: லீ வேலி வெலோபார்க்கில் இண்டோர் சைக்கிளிங் செண்டரில் நடக்கிறது. ஸ்பிரிண்ட்/பாரா ஸ்போர்ட் டாண்டெம் ஸ்பிரிண்ட், டைம் டிரையல், ஸ்க்ராட்ச் ரேஸ், பாயிண்ட்ஸ் ரேஸ், டீம் ஸ்பிரிண்ட் மற்றும் கெரின்.

ஜூலை 29 – ஆகஸ்ட் 2: ஜிம்னாஸ்டிக்ஸ் – ஆர்டிஸ்டிக்ஸ் – அரேனா பர்மிங்காமில் நடக்கிறது.

ஜூலை 29 – ஆகஸ்ட் 6: லான் பௌல்ஸ் மற்றும் பாரா லான் பௌல்ஸ் – விக்டோரியா பார்க்கில் நடக்கிறது.

ஜூலை 29 – ஆகஸ்ட் 8: நெட்பால்

ஜூலை 29 – ஆகஸ்ட் 8: ஹாக்கி – பர்மிங்காம் பல்கலைக்கழகத்தின் அவுட்டோர் பிட்ச்களில் ஹாக்கி போட்டிகள் நடக்கின்றன.

ஜூலை 29 – ஆகஸ்ட் 8: ஸ்குவாஷ்

ஜூலை 29 – ஆகஸ்ட் 8: டேபிள் டென்னிஸ் மற்றும் பாரா டேபிள் டென்னிஸ் – 2002ம் ஆண்டிலிருந்து காமன்வெல்த்தில் டேபிள் டென்னிஸ் விளையாட்டு ஆடப்பட்டுவருகிறது. ஆனால் இந்த ஆண்டுதான் பாரா டேபிள் டென்னிஸ் சேர்க்கப்பட்டுள்ளது.

ஜூலை 29 – 31: டிரயத்லான் மற்றும் பாரா டிரயத்லான்

ஜூலை 30 – ஆகஸ்ட் 3: பளுதூக்குதல்

ஜூலை 30 – ஆகஸ்ட் 7: பீச் வாலிபால்

ஆகஸ்ட் 1 – 3: ஜூடோ

ஆகஸ்ட் 2 – 7: தடகளம்

ஆகஸ்ட் 3: சைக்கிளிங்  – மௌண்டைன் பைக்

ஆகஸ்ட் 4: சைக்கிளிங் – டைம் டிரையல்

ஆகஸ்ட் 4: பாரா பவர்லிஃப்டிங்

ஆகஸ்ட் 4 – 6: ஜிம்னாஸ்டிக்ஸ்

ஆகஸ்ட் 4- 8: அகுவாடிக்ஸ் – டைவிங்

ஆகஸ்ட் 5 – 6: மல்யுத்தம்

ஆகஸ்ட் 7: சைக்கிளிங் – ரோட் ரேஸ் – வார்விக்ஸ் மைட்டான் ஃபீல்ட்ஸ், க்ரீன் ரீக்ரியேஷன் ஸ்பேஸ்.

ஆகஸ்ட் 8 – நிறைவு விழா

Categories

Tech |