காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகள் பர்மிங்காமில் வரும் ஜூலை 28ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 8-ம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்த போட்டிகளில் 72 நாடுகளில் இருந்து 5000 விளையாட்டு வீரர்கள் பல்வேறு விளையாட்டு போட்டிகளில் கலந்து கொண்டு விளையாட உள்ளனர். இந்த போட்டிகளில் இந்தியாவிலிருந்து மொத்தம் 19 பிரிவுகளில் 141 போட்டிகளில் 215 விளையாட்டு வீரர்களும் வீராங்கனைகளும் பங்கேற்க உள்ளனர்.
மல்யுத்தம், பளு தூக்குதல், ஈட்டி எறிதல், ஹாக்கி மகளிர், கிரிக்கெட் ஆகிய விளையாட்டுகளில் இந்தியா மீது பெரும் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. ஜூலை 29ஆம் தேதி காமன்வெல்த் போட்டியின் முதல் நாளின் இந்தியாவிற்கான போட்டிகள் மற்றும் எந்தெந்த வீரர்கள் அன்றைய தினம் விளையாடுகிறார்கள் என்பது தொடர்பான தகவல் வெளியாகியுள்ளது.
அதன்படி,
Lawn Bowl – மாலை 5.30 மணி (இந்திய நேரம்)
சுனில் பஹதூர், சந்தன் குமார் சிங், நவ்நீத் சிங், தினேஷ் குமார், ம்ரிதுல் பார்கொஹைன், பிங்கி, டானியா சௌத்ரி, ரூபா ராணி டிர்க்கி, நயன் மோனி சைக்கியா, லவ்லி சௌபி.
டேபிள் டென்னிஸ் – மாலை 6.30 (இந்திய நேரம்)
ஆடவர் மற்றும் மகளிர் தகுதிச்சுற்று, சுற்று 1
மகளிர் டேபிள் டென்னிஸ் அணி – மானிகா பத்ரா, ஸ்ரீஜா அகுலா, ரீத் ரிஷ்யா, தியா சிட்டாலே.
ஆடவர் டேபிள் டென்னிஸ் அணி – ஷரத் கமல், ஞானசேகரன் சத்தியன், ஹர்மீத் தேசாய், சனில் ஷெட்டி.
நீச்சல் – இரவு 7.30 மணி (இந்திய நேரம்)
வீரர்கள் – சஜன் பிரகாஷ், ஸ்ரீஹரி நடராஜ், குஷக்ரா ராவத்
மகளிர் கிரிக்கெட் – இரவு 8 மணி (இந்திய நேரம்)
இந்தியா vs ஆஸ்திரேலியா (க்ரூப் மேட்ச்)
மகளிர் டிரயத்லான் – இரவு 8 மணி
வீராங்கனைகள் – சஞ்சனா ஜோஷி, பிரஞ்யா மோகன்
பாக்ஸிங் – இரவு 9 மணி
ஷிவா தாப்பா – ஆடவர் (Round of 32)
சுமித் குண்டு – ஆடவர் 75 கிலோ எடைப்பிரிவு (Round of 32)
ஸ்குவாஷ் – இரவு 9 மணி
ஆடவர் ஒற்றையர் – ராமித் டண்டன், சௌரவ் கோஷல், அபய் சிங்
மகளிர் ஒற்றையர் – ஜோஷ்னா சின்னப்பா, அனஹத் சிங், சுனைனா குருவில்லா
பேட்மிண்டன் – இரவு 11 மணி
கலப்பு அணி தகுதிச்சுற்று 1 – இந்தியா vs பாகிஸ்தான்
பாக்ஸிங்:
ஆடவர் 67 கிலோ எடைப்பிரிவு – ரோஹித் டோகாஸ்
ஆடவர் 75 கிலோ எடைப்பிரிவு – ஆஷிஷ் சௌத்ரி
ஆடவர் ஹாக்கி:
இந்தியா vs கானா