இங்கிலாந்து நாட்டின் பர்மிங்காம் நகரில் நடைபெறும் காமன் வெல்த் விளையாட்டு போட்டிகளில் இந்தியா தொடர்ந்து பதக்கங்களை குவித்துவருகிறது. மல்யுத்த போட்டிகளில் இந்தியா ஒரேநாளில் 3 தங்க பதக்கங்களை கைப்பற்றியுள்ளது. நேற்று நடந்த ஆண்களுக்கான மல்யுத்தப் போட்டியில் 65 கிலோ எடைப் பிரிவுவில் இந்திய வீரர் பஜ்ரங்புனியா தங்கம் வென்று சாதனை படைத்திருக்கிறார். இதேபோன்று பெண்களுக்கான 62 கிலோ பிரிஸ்டைல் எடைப்பிரிவில் இந்திய வீராங்கனை சாக்சிமாலிக் தங்கம் வென்றார்.
மேலும் 23வது வயதான இந்தியவீரர் தீபக் புனியா, பாகிஸ்தானின் முகம்மது இனாமை வீழ்த்தி தங்கம் வென்று இருக்கிறார். இதன் வாயிலாக இந்தியா வென்றுள்ள தங்கப்பதக்கங்களின் எண்ணிக்கையானது 9 ஆக உயர்ந்துள்ளது. அதன்பின் காமன்வெல்த் மல்யுத்த போட்டியில் ஆண்களுக்கான 125கிலோ எடைப் பிரிவில் இந்தியவீரர் மோஹித் கிரேவால் வெண்கலம் வென்றார். மல்யுத்த போட்டியில் 68 கிலோ பிரிஸ்டைல் பிரிவில் இந்தியவீராங்கனை திவ்யா கக்ரன் வெண்கலப்பதக்கம் வென்றார். முன்பாக இந்திய இளம் வீராங்கனை அன்ஷுமாலிக் மகளிர் 57 கிலோ எடைப் பிரிவு மல்யுத்தப் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.